🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

தமிழக வெற்றிக் கழகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின்படிகழக பொதுச் செயலாளர்மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு N ஆனந்த்அவர்களின் நல்வழியில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் …

பொள்ளாச்சி வால்பாறை மெயின் ரோடு ஆவல்சினம்பாளையம் சுப்பிரமணியம் அவர்களின் மகன் நந்தகுமார் என்பவர் பொள்ளாச்சி கோவை மெயின்ரோட்டில் உள்ள சிடிசி டிப்போ பின்புறம் கடந்த நான்கு வருடமாக டீக்கடை நடத்தி …

அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது. அண்ணாமலை வந்ததால் பா.ஜ.க பலமடையவும் இல்லை; அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை. அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள். பொதுநலவாதிகள் பா.ஜ.க.விலேயே தொடருகின்றனர். …

கோவை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட அறிவிக்கப்படாத சர்ச்சைகள் தான் ஏராளமான உள்ளன. முதலமைச்சர் விஜயும், அமைச்சர்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆய்வு என்கிற …

கோவை : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் புதிய விதிகள் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு …

முக்கிய செய்தி

  • Home /
  • JUSTNOW /
  • கோவை.அ.தி.மு.க.வேட்பாளர் தர்ணா

கோவை.அ.தி.மு.க.வேட்பாளர் தர்ணா

செந்தில் பாலாஜி தொகுதியில் தேர்தலை ரத்து பண்ணுங்க! அதிமுக வேட்பாளர் தர்ணா.

கோவை தெற்கில் பரபரப்பு:

கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தனது ஆதரவாளர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு தொடர்ந்து பணப்பட்டுவாடா நடந்து வருவதாகவும், ஆனால் பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு வைத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி களம் காண்கிறார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் அம்மன் அர்ஜுனன் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்யுமாறு கூறி தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்