🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை.

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத அவலம்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை – மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கைசெங்கம், செப். 10:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், நரசிங்கநல்லூர் ஊராட்சி பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 1 முதல் 5 வயது வரையிலான சுமார் 61 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களுக்காக அங்கன்வாடி மையம் அமைக்கப்படாததால், குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.நரசிங்கநல்லூர் ஊராட்சியின் செய்யாற்றங்கரை பகுதியில் வசிக்கும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல வேண்டுமெனில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், குழந்தைகள் செல்லும் வழியில் செய்யாறு ஆறு குறுக்கிடுவதுடன், செய்யாற்றங்கரை சாலை வசதிகளும் போதிய அளவில் இல்லாததால், சிறு குழந்தைகளை அழைத்துச் செல்வது பெற்றோருக்கு மிகுந்த அச்சத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.10 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைஇப்பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்களில் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுதொடர்பாக செய்தித்தாள்களிலும் செய்தி வெளியான பின்னரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.மாவட்ட ஆட்சியரிடம் மனுஇதையடுத்து, அப்பகுதி மக்களின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 29.06.2026 அன்று மனு எண் 488 மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனு அளித்து பல நாட்கள் கடந்தும் இதுவரை அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதனால், தங்கள் பகுதியில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி, அங்கன்வாடி சேவைகள் மற்றும் மதிய உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க கோரிக்கைமேலும், நரசிங்கநல்லூர் ஊராட்சி பகுதியில் செய்யாறு குறுக்கிடுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்தப் பாதையை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.மக்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்ய கோரிக்கைகலசப்பாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பன்னீர்செல்வம், சரவணன் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் நரசிங்கநல்லூர் ஊராட்சி செய்யாற்றங்கரை பகுதிக்கு நேரில் வந்து, பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சினைகளை கேட்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறிப்பாக, 61 குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக அங்கன்வாடி மையம் அமைக்கவும், குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர உரிய சாலை வசதிகளை ஏற்படுத்தவும், செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரசிங்கநல்லூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தலைமைச் செய்தியாளர் P. பிரபு

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் ஹதிமானி, அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. குத்தலிங்கம் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) அறிவுறுத்தலின்படி காவலர்கள் அனைவரும் காவலர் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டம்–ஒழுங்கை பாதுகாத்தல் மற்றும் காவல் பணியில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவது குறித்து உறுதிமொழி ஏற்றனர்

“சுங்கம் வசூலிக்க வெளிச்சம் இருக்கு… வாகன ஓட்டிகளுக்கு வெளிச்சம் இல்லையாம்

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் எரியாமல் இருப்பதாகவும், இதனால் சுங்கச்சாவடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இரவு நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கியமான சாலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இருள் காரணமாக எதிரே வரும் வாகனங்கள், சாலையில் உள்ள தடுப்புகள் உள்ளிட்டவற்றை சரியாகக் கவனிக்க முடியாத நிலை ஏற்படுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.🚨 கட்டணம் வசூலிப்பதில் கவனம்… அடிப்படை வசதிகளில் அலட்சியமா?சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் கட்டணம் முறையாக வசூலிக்கப்படும் நிலையில், அதற்கேற்ப பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.குறிப்பாக, சுங்கச்சாவடியில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போதிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்றும், சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும் புகார் எழுந்துள்ளது.சுத்தம் மற்றும் சுகாதார வசதிகள் முறையாக இல்லாத நிலையில், பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்தும்போது நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.❓ நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, மின்விளக்கு, குடிநீர், கழிவறை மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.“பண வசூலிப்பதில் காட்டப்படும் அக்கறை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதிலும் காட்டப்பட வேண்டும்” என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.மேலும், பல நாட்களாக மின்விளக்குகள் எரியாதது மற்றும் சுகாதார வசதிகள் முறையாக இல்லாதது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகம் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.👉 சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைத்து, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை முறையாக பராமரித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செய்தியாளர் S. ராமலிங்கம்

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித் தர கோரிக்கை.

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாபு த/பெ. லோகா என்பவர் நரிக்குறவர் சங்கத் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில், வறுமையின் விளிம்பில் வாழ்ந்து வரும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தச்சூர் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட காலி மனைகளில், தமிழக அரசின் வெற்றி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், வீடு இல்லாமல் சிரமப்பட்டு வரும் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் அடிப்படை தேவைகளையும் கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. செய்தியாளர் P.பிரபு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகே CITU சங்கத்தினர் கவன ஈர்ப்பு போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து நிறுத்து. வேடிக்கை பார்க்காதே ரோந்து பணியில் ஈடுபடு. FCST.56. மீனவர் கூட்டுறவு சங்கத்தினரை சாத்தனூர் நீர் தேக்கத்தில் மார்ச் 12. மே 24. ஆகஸ்ட் 9. அன்று கொள்ளை கொலை தாக்குதல் நடத்திய போயம்பள்ளி தண்டா வேப்பூர்செக்கடி கள்ள மீன் வியாபாரிகள். கள்ள மீன் பிடிப்பவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு. எஸ்சி எஸ்டி. வழக்குப் பதிவு செய். கைது செய். வேடிக்கைப் பார்க்காதே. தாக்கிக் கொள்ளையடித்துச் சென்ற படகு இஞ்சின்.2.TN.42.O6258&TN.22.AL.1003. ஸ்பிலிண்டர் வாகனம் 3 செல்போன்கள்.3 சவரன் நகைகள் மீட்டுக் கொடு. கள்ள மீன் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்திடு. காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்படும் திருட்டு மீன் பிடிப்பவர்கள் மீது வழக்குப்பதிந்திடு. கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெறு. பொய் வழக்கு தவறாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடு. வனத்துறையே அத்திமீறி காட்டுக்குள் வாகனங்களில் சுற்றித் திரியும் கள்ள மீன் பிடிப்பவர்களை கைது செய். சாத்தனூர் அணை மீன் குத்தகைதாரர்களுக்கு மீன்பிடி அனுமதி வழங்கு. செய்தியாளர் M. சங்கர்

நாவக்குறிச்சி அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவிலில் கல்வெட்டு அமைப்புவருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பணி நிறைவு.

நாவக்குறிச்சி அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவிலில் கல்வெட்டு அமைப்புவருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பணி நிறைவுசேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவிலில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் Cont.P. No.2440/2026 in W.P. No.7771/2026 வழக்கில் கடந்த 25.02.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருக்கோவில் பெயரைக் குறிக்கும் வகையில் “அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவில்” என கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்றது.அதன்படி, 19.08.2026 அன்று நாவக்குறிச்சி கிராம எல்லைக்குட்பட்ட புல எண் 202/2-ல், கோவில் மற்றும் ஓடை அமைந்துள்ள பகுதியில், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் “அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவில்” என கல்வெட்டு அமைக்கப்பட்டது.இப்பணியின்போது வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற இந்நிகழ்வினால் நாவக்குறிச்சி கிராமத்தில் எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படாமல், கல்வெட்டு அமைக்கும் பணி அமைதியான முறையில் நிறைவு பெற்றது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தண்டராம்பட்டு வட்டத்தில் பிரச்சார நடைபயணம் இளையாங்கன்னி கிராமத்தில் தொடங்கி பெருங்குளத்தூர் பி குயிலம் பயணம் முடிவு பெற்றது கலந்து கொண்டனர் தலைமை வட்டாரச் செயலாளர் சி ஏழுமலை மாவட்ட செயலாளர் ரா திருமலை மாவட்ட துணை செயலாளர் டி ராஜேந்திரன் வட்டாரத் துணைச் செயலாளர் கு தனபால் உள்ளிட்ட இளங்கண்ணி செயலாளர் புலவேந்திரன் பி கோயில் செயலாளர் வேலூர் இளை மன்ற செயலாளர் சிவகாமி உட்பட நடக்கும் போராட்டம் கலந்து கொண்டன தண்டராம்பட்டு செய்தியாளர் சத்தியசீலன்

சேலம் அருகே கூலி தொழிலாளி மின் கம்பி தாக்கி மரணம் அடைந்தார். உறவினர்கள் காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் அண்ணாநகரை சேர்ந்த சிவகுமார் 55 தந்தை பெயர் குஞ்சு பையன் Sc ஆதி திராவிடர் என்பவர்க்கு இந்திராணி என்ற மனைவியும், உதயகுமார் வயது 30என்ற மகனும், சுகன்யா 28. சுருதிகா 26. என்ற இரு மகள்களும் உள்ளனர் , நேற்று 05/08/2026 வீறமாத்தி கோயில் அருகில் சங்கர் என்பவரின் வீட்டிற்கு வெளியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது மிகவும் அருகில் உள்ள மின்சார கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிர்பிரிந்தன , மேற்படி சம்பவம் குறித்து கொளத்தூர் உதவி ஆய்வாளர் திரு உதய் பாஸ்கர் அவர்கள் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய நிலையில். இன்று சிவகுமாரின் சடலத்தை திரும்பி பெற முடியாது என்று உறவினர்கள் கொளத்தூர் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சேலம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி குறித்து பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடைபெற்றது.

காமக்காபாளையத்தில் மக்காச்சோள சாகுபடி குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சிதலைவாசல், ஆக. 4:சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்திற்குட்பட்ட காமக்காபாளையத்தில், ‘ஆத்மா’ (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொடர்பான பண்ணைப்பள்ளியின் 3-ஆம் வகுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், வேளாண்மைத் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, வேளாண்மை விரிவாக்க மையத்தின் செயல்பாடுகள் மற்றும் ‘ஆத்மா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகளின் தரத்தை நேரில் ஆய்வு செய்தார்.துணை வேளாண்மை அலுவலர் மணவழகன், வறட்சியைத் தாங்கி பயிர்கள் வளர உதவும் பி.பி.எஃப்.எம். (PPFM) திரவத் தெளிப்புத் தொழில்நுட்பம் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.பயிற்சியாளர் பிரவீன், சூரிய விளக்கு பொறி மற்றும் இனக்கவர்ச்சி பொறிகள் மூலம் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விளக்கினார். பயிற்சியாளர் வெங்கடாசலம், இயற்கை பூச்சி விரட்டிகள், பஞ்சகாவியம், தசக்காவியம் மற்றும் மீன் அமிலம் தயாரித்து பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கினார்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்தி, ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், நானோ யூரியாவின் பயன்கள் மற்றும் தெளிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளித்தனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்துவேல், விவசாயிகளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று பூச்சிகள் மற்றும் நோய்களை அடையாளம் காணும் நடைமுறை பயிற்சியையும் வழங்கினார்.இப்பயிற்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு, மக்காச்சோள சாகுபடிக்கான நவீன மற்றும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து பயனடைந்தனர். சேலம் செய்தியாளர் பாலமுருகன்

உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை அடுத்து தலைவாசலில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது: தலைவாசலில் திமுகவினர் சாலை மறியல்; ஏராளமானோர் கைதுசேலம், ஆக. 4:தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்டம், தலைவாசல் ஒருங்கிணைந்த ஒன்றிய திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.தலைவாசல் ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கிய போராட்டம் பின்னர் சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலாக மாறியது. போராட்டத்திற்கு தலைவாசல் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் சாத்தப்பாடி மணி (எ) க. பழனிசாமி தலைமை வகித்தார்.காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தமிழக அரசை கண்டித்து, போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். கைதானவர்களில் தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.இந்தப் போராட்டத்தால் சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர். சேலம் செய்தியாளர் பாலமுருகன்