🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் சிறை வார்டன்,சிறை காவலர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். தேனி சிறையின் தலைமை சிறைக்காவலர்கள் …

பாலியல் புகாருக்குள்ளான ஜெம் வீரமணி மீது, பாதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கிலும் வீரமணியின் பெண் தோழியான சாந்தியின் வீட்டிலேயே …

வால்பாறை அரசு கலைக்கல்லில் இளங்கலை பயின்று வரும் மாணவரும் வால்பாறை சிறுவூர் பூங்கா பகுதி சூப்பு கடை மணி அவர்களின் புதல்வர் ஆதிக் தனது விஞ்ஞான கண்டுபிடிப்பிற்காக தமிழக முதல்வர் …

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 25 ஆண்டுகால தொடர் தலைமை மற்றும் பொது சேவைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி …

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி வட்டாரம் மருசூர் அங்கன்வாடி பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சீனிவாசன் அறக்கட்டளை இணைந்து ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு போளூர் ஆரணி …

முக்கிய செய்தி

  • Home /
  • SPIRITUALITY /
  • Temple /
  • சிறுவாச்சூரில் துர்க்கை அம்மன்- அய்யனார் சுவாமி தேரோட்டம்.

சிறுவாச்சூரில் துர்க்கை அம்மன்- அய்யனார் சுவாமி தேரோட்டம்.

சிறுவாச்சூரில் துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தலைவாசல், ஜூலை 1–சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் அருள்மிகு துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி கோவில் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவிழாவையொட்டி அதிகாலை முதல் கோவிலில் துர்க்கை அம்மன் மற்றும் அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மலர்கள் மற்றும் வண்ண அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளினர்.அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அம்மன் அரோகரா”, “அய்யனார் அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேருக்கு பெண்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து, மலர் தூவி, நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.தேரோட்டத்தைக் காண சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் ஈடுபட்டு, தேரோட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற ஒத்துழைத்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட நிருபர் பாலமுருகன்