🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

நாவக்குறிச்சி அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோவிலில் கல்வெட்டு அமைப்புவருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பணி நிறைவுசேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு …

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தண்டராம்பட்டு வட்டத்தில் பிரச்சார நடைபயணம் இளையாங்கன்னி கிராமத்தில் தொடங்கி பெருங்குளத்தூர் பி குயிலம் பயணம் முடிவு பெற்றது கலந்து கொண்டனர் தலைமை வட்டாரச் செயலாளர் …

சேலம் மாவட்டம் கொளத்தூர் அண்ணாநகரை சேர்ந்த சிவகுமார் 55 தந்தை பெயர் குஞ்சு பையன் Sc ஆதி திராவிடர் என்பவர்க்கு இந்திராணி என்ற மனைவியும், உதயகுமார் வயது 30என்ற மகனும், …

காமக்காபாளையத்தில் மக்காச்சோள சாகுபடி குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சிதலைவாசல், ஆக. 4:சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்திற்குட்பட்ட காமக்காபாளையத்தில், ‘ஆத்மா’ (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொடர்பான …

உதயநிதி ஸ்டாலின் கைது: தலைவாசலில் திமுகவினர் சாலை மறியல்; ஏராளமானோர் கைதுசேலம், ஆக. 4:தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்டம், …

முக்கிய செய்தி

தமிழ்நாடு முதலமைச்சரை இழிவாக பேசியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் GK கதிரவன் தலைமையில்…தமிழக முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களை இழுவை படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேட்டவலத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலின் திருவுருவ பொம்மையை தீயீட்டு கொளுத்தினார்கள்… மேலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை கைது செய்ய வலியுறுத்தி வேட்டவலம் காவல் நிலையத்தில் மாவட்ட மகளிர் அணி சார்பாக புகார் அளிக்கப்பட்டது…செய்தியாளர் வெங்கடேசன்

அரசு பேருந்தை வழிமடக்கி உள்ளே இருந்தவரை வெற்றி சென்ற மூன்று மர்ம நபர்கள்

அரசு பேருந்தில் சென்ற இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்….திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் கிராமம் அருகே அரசு பேருந்தை வழிமடக்கி பேருந்தில் பயணம் செய்த இளைஞரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர், ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் தொடர்பாக தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.திருவண்ணாமலையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசு பேருந்தில் ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் பயணம் மேற்கொண்டுள்ளார், அப்போது தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் புற்றுக்கோவில் அருகே அரசு பேருந்து சென்றபோது பேருந்தை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் சிவசங்கரை அரிவாளால் சரமாறியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர், அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவசங்கரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பேருந்தில் பயணம் செய்த இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் மர்ம நபர்கள் இளைஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர், இந்த கொலைவெறி தாக்குதலுக்கு முன்விரோதமா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாவட்டச் செய்தியாளர் P.பிரபு

திருவண்ணாமலை மாவட்டம் பாய்ச்சல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பாய்ச்சல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அவர்கள் மற்றும் S.வேலு எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டார்கள். உடன் RDO. செங்கம் வட்டாட்சியர் P.முருகன் அவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள். மற்றும் பல அரசு அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இங்கு பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. உதவி தொகை வழங்கப்பட்டது. மகளிர்களுக்கு லோன் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆர்கானிக் உரம் வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்டது. மற்றும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் தோட்டக்கலை பயில்கின்ற மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்க்க காலமுள்ளதாகவும். விருப்பப்படுவோர் வந்து சேரலாம் என்றும் கூறப்பட்டது. இன்னும் பல உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மாவட்டச் செய்தியாளர் P.பிரபு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சிறப்பாக திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இன்று சிறப்பாக திறக்கப்பட்டது. இதில் தலைவர் M. கோவிந்தராஜ். கௌரவ தலைவர் SPR.ராமலிங்கம்.செயலாளர் P.பிரபு. பொருளாளர் A. அசோகன். துணைத் தலைவர் k.சுரேஷ் துணைச் செயலாளர் R. திருமுருகன். துணைச் செயலாளர் M. சங்கர் ஆகியோரை வாகன உரிமையாளர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தார்கள். அதுமட்டுமின்றி அனைவரும் இந்த சங்கம் வளர்ச்சிக்காக ஒற்றுமையாகவும் உண்மையாகவும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் ஸ்ரீ ஐயனார்- ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா கோலங்கலமாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் ஸ்ரீ ஐயனார் – ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா கோலாகலம்தலைவாசல், ஜூலை 28: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் – ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயிலின் ஆண்டு தேர் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.விழாவையொட்டி அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ ஐயனார் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் குலவையிட்டு சுவாமியை வழிபட்டனர். தேவியாக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்.தேர் திருவிழாவை முன்னிட்டு காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு விழா சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் கண்காணிப்பில் விழா அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பாக நிறைவடைந்தது. சேலம் செய்தியாளர் பாலமுருகன்

செய்தி: 27.07.2026

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் கிராமம் – கனிம கொள்ளையை தடுக்கத்தவறிய, விதிகளுக்கு புறம்பாக செயல்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும், 1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பை ஏற்படுத்திய கல்குவாரிகளை நிறுத்தாமல் இழுத்தடிக்கும் – கோவை மாவட்ட நிர்வாகத்தையும், கனிம துறையையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் விவசாயி முருகானந்ததிற்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கும் வரை வரும் 29.07.2026 புதன் கிழமை, காலை 10 மணி – முதல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கனிம கொள்ளைக்கு எதிரான கூட்டியக்கம் கிணத்துக்கடவு சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்.

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோதமாக மண் கொள்ளை.

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கிராவல் மண் உள்ளிட்ட மண்ணையும் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆட்சிக் காலத்திலேயே ஏரியில் இருந்து அதிகளவில் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுக்கப்பட்டதால், ஏரியின் பல பகுதிகளில் பாறைகள் வெளிப்படும் அளவுக்கு ஆழமான பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும், சில இடங்களில் கிணறு போன்ற ஆழமான குழிகளும் தோண்டப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.தற்போது, வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியை பயன்படுத்தி, கிராவல் மண்ணையும் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்து வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், ஏரியில் உள்ள நான்கு கிணறுகள் மற்றும் பிற நீராதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே, சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஏரியில் எவ்வளவு அளவு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதுவரை எவ்வளவு மண் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு, சட்டவிரோத மண் அள்ளுதலை உடனடியாக தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாவக்குறிச்சி கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் செய்தியாளர் பாலமுருகன்

S.P.வேலுமணியால் நடந்த சதி.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத கோவை அதிமுக மாவட்ட செயலாளர். செ.ம .வேலுச்சாமி :

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. தூய சக்தி என கூறி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது அந்த கட்சியின் பெண் வழக்கறிஞர் ஒருவரே, தமிழகம் முழுவதும் பணம் பெற்று கொண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.கட்சி தொடங்கியதில் இருந்தே நான் பதவியுடன் இருந்தேன். கடந்த 13 வருட காலமாக கட்சியில் பதவியின்றி பல்வேறு அவமானங்களை சந்தித்தேன். பல கட்சிகளில் இருந்து எனக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை தர முன்வந்தனர். பணம் கொடுத்தும் என்னை அழைத்தனர். நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. எங்கோ இருந்த என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பி அமைச்சராக்கியதும், பிறகு மேயராக்கியதும் இந்த கட்சி தான். எனக்கு அவமானம் ஏற்படும்போது வேறு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்துள்ளேன் என்றும் கண்ணீர் மல்க பேசினார்.

படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை.

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் V.S.அன்பு முன்னேனில் சிறப்பாக நடைபெற்றது கழகத் தோழர்கள் ஒன்றிய பொருளாளர் முபாரக் ஒன்றிய துணைச் செயலாளர் அஜித் படவேடு கிளைச் செயலாளர் அன்பு மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். காசப்பாக்கம் செய்தியாளர் வெங்கடேசன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அனைத்து லாரி உரிமையாளர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவா அர்ஜுனாவிடம் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் வட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் ஏரி வண்டல் மண் எடுத்து செங்கம் வட்டத்தில் உள்ள விவசாயப் பணிகளை தடையின்றி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏதுவாக இருந்து வந்தது என்றும் கடந்த இரண்டு மாதங்களாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தடை உத்தரவின் பேரில் எந்த ஒரு டிப்பர் லாரியும் இயங்காமல் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகவும் பெருத்த கஷ்டத்திலும். நஷ்டத்திலும் சுமார் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி உரிமையாளர்களும்.ஓட்டுநர்களின் குடும்பமும். மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகிறது. தற்போதுள்ள தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த விவசாய மக்களுக்கு ஏரி வண்டல் மண். மற்றும் பொதுமக்கள் வீட்டு பயன்பாட்டிற்காக கிராவல் மண் அரசாணை rule 12(2) மற்றும்12 (2-A)கொடுக்கப்பட்ட உத்தரவின் பெயரில் கம்மாய். ஏரி. குளம். மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து களிமண். வண்டல் மண். சவுடு. சரலை . போன்றவை விவசாயம். மண்பாண்டம் செய்வதற்காகவும். மற்றும் சொந்த வீடு பயன்பாட்டுக்காகவும். எடுத்துச் செல்ல அரசாணை வழங்கி உள்ளார். அதன்படி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிந்துரை செய்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் தடையின்றி தொடர வழிவகை செய்யுமாறும் மனுவில் கொடுக்கப்பட்டுள்ளன. செய்தியாளர் P. பிரபு