4 ஏக்கர் கரும்பு எரிந்து சாம்பல் ஆனது விவசாயி வேதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அல்லியந்தல் கிராமம் வேலு என்பவரின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட சுமார் -4 ஏக்கரில் பரப்பளவு உள்ள அறுவடை செய்ய தயாராக இருந்த சுமார் 150 டன்.கரும்பு முற்றிலும் எதிர்பாராத விதமாக தீப்பற்றி அனைத்தும் தீயில் கருகி எரிந்துவிட்டது…!!!பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்திற்கு தமிழக அரசுக்கு உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன காசப்பாக்கம் செய்தியாளர் M. வெங்கடேசன்
மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர்திரு C ஜோசப் விஜய் அவர்களின் 52- வது பிறந்தநாள் முன்னிட்டு திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் GK கதிரவன் அவர்கள் தலைமையில் போளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு அவர்களின் முன்னேற்பாட்டில் புகழ்பெற்ற ரேணுகாம்பாள் திருக்கோயில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது!!உடன் பார்த்திபன் மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஷ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ராஜசேகர் மாவட்ட மக்கள் இயக்கம் பாண்டியன் மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் வெங்கடேஷ் மாவட்ட ஊடாக அணி அமைப்பாளர்…மற்றும் படவேடு ஒன்றிய & கிளை நிர்வாகிகள்
கோவை: பள்ளிக்கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!
கோவை: பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக காரணங்களுக்காக முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 2023 ஆகஸ்ட் முதல் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பாலமுரளி, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், 2025 நவம்பர் முதல் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த மகேஸ்வரி, கோவை மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுவாச்சூரில் துர்க்கை அம்மன்- அய்யனார் சுவாமி தேரோட்டம்.

சிறுவாச்சூரில் துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தலைவாசல், ஜூலை 1–சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் அருள்மிகு துர்க்கை அம்மன்–அய்யனார் சுவாமி கோவில் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவிழாவையொட்டி அதிகாலை முதல் கோவிலில் துர்க்கை அம்மன் மற்றும் அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மலர்கள் மற்றும் வண்ண அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளினர்.அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அம்மன் அரோகரா”, “அய்யனார் அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேருக்கு பெண்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து, மலர் தூவி, நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.தேரோட்டத்தைக் காண சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் ஈடுபட்டு, தேரோட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற ஒத்துழைத்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட நிருபர் பாலமுருகன்
கோவை : நஞ்சுண்டாபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு திட்டச்சாலை; மாநகராட்சி முயற்சித்தால் உருவாக்கலாம்:
கோவை: கோவையில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல பிரதான ரோடுகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இணைப்பு சாலைகள், திட்ட சாலைகள் ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 5 இணைப்பு சாலைகள் ஏற்படுத்த தொழில் துறையினர் கோருகின்றனர்.மனைப்பிரிவு அனுமதி பெறும்போது, வளர்ச்சி கட்டணமாக கோவை மக்கள் செலுத்திய தொகை, நகர ஊரமைப்புத் துறையில் கோடிக்கணக்கில் இருக்கிறது.அத்தொகையை கேட்டுப் பெற்று சாலைகள் உருவாக்க வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து வெள்ளலுார் செல்லும் வாகன ஓட்டிகள், நஞ்சுண்டாபுரம் ரயில்வே பாலத்துக்கு கீழே உள்ள கரடுமுரடான ரோட்டில் செல்கின்றனர். இருபுறமும் புதர் மண்டி கிடக்கிறது; தெருவிளக்கு வசதி இல்லை என்பதால் இரவில் இந்த பாதையை பயன்படுத்துவது ஆபத்தானது. போத்தனுார் வழியாக வெள்ளலுார் செல்வது சுற்றுப்பாதை; பல கி.மீ. அலைய வேண்டும். நஞ்சுண்டாபுரம் மயானம் அருகே உள்ள வழித்தடத்தில் வெள்ளலுார் செல்ல, 60 அடி திட்டச்சாலை உருவாக்க, உள்ளூர் திட்ட குழுமத்தில் திட்ட வரைவு உள்ளது. ரயில்வே கேட் கடந்ததும் கந்தன் பிள்ளையார் ரோட்டின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தி, நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டினால் இணைப்பு சாலை கிடைக்கும்.வெள்ளலுாரில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் வாகன ஓட்டிகள் சென்று வரலாம். அப்பகுதி விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் தர முன்வருகின்றனர். மாநகராட்சி முயற்சித்து செயல்படுத்தினால் புதிதாக திட்டச்சாலை உருவாக்கலாம். மக்களின் அவஸ்தையை போக்கலாம்.
கோவையில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு: பாலியல் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!
25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், அழுகிய சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது.சிதைந்த முகம் – அடையாளம் காண்பதில் சிக்கல்..மீட்கப்பட்ட பெண்ணின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்களை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை.அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகமும் எழுந்துள்ளது. தீவிரமடையும் போலீஸ் விசாரணை.. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு கிடைத்த முக்கிய ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காகவும், பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்துள்ளதா என்பதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குனியமுத்தூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் கோவையில் மாயமான பெண்களின் விபரங்களை வைத்து போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
சேலத்தில் 22 ஆம் ஆண்டு மெகா பரிசளிப்பு விழா.

சேலத்தில் 22-வது ஆண்டு மெகா பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறதுசேலம்:தமிழ்நாடு வீரசைவப் பேரவை, தலைமை ஜங்கம் சமூக நலச்சங்கம் மற்றும் நாகரத்தினம் அங்காளம்மாள் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 22-வது ஆண்டு மெகா பரிசளிப்பு விழா நாளை (ஜூன் 28) காலை 10 மணிக்கு சேலம் சீல்நாயக்கன்பட்டி பைபாஸ் அருகிலுள்ள சந்திரா மகாலில் நடைபெறுகிறது.இவ்விழாவில் 2026-ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.மேலும் மகான் பசவண்ணர் ஜெயந்தி விழா, அகில இந்திய வீரசைவ மகாசபை தலைவருக்கான பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் இணைந்து நடைபெறுகின்றன. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசி வழங்கியுள்ளனர்.விழாவில் அகில இந்திய வீரசைவ மகாசபை தலைவரும், கர்நாடக மாநில வனத்துறை அமைச்சருமான ஈஸ்வர் பி. கண்ட்ரே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். அகில இந்திய வீரசைவ மகாசபை பொதுச் செயலாளர் ரேணுகா பிரசன்னா உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.தமிழ்நாடு வீரசைவப் பேரவை மாநிலத் தலைவர் நாகரத்தினம், தலைமை ஜங்கம் சமூக நலச்சங்க மாநிலத் தலைவர் ஏ.கே. நாகராஜன், அகில இந்திய வீரசைவப் பேரவை மாநில பொதுச் செயலாளர் பாலாஜி, பொருளாளர் விவேகானந்தன், மாநில பொதுச் செயலாளர் கலியமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் விழாவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வால்பாறை மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி அறம் மருத்துவமனை நடத்தும் மருத்துவ முகாம் :
இன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வால்பாறை மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி அறம் மருத்துவமனை மற்றும் அறம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு முகாம் நடைபெற்றது இம்முகாமை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மதிப்புமிகு குட்டி@சுதாகர் அவர்கள் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சிவன் ராஸ், மற்றும் பொள்ளாச்சி அறம் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நகர அவைத் தலைவர் C.செல்லமுத்து துணை செயலாளர் P.சூரிய பிரபா நகர மன்ற உறுப்பினர்கள்JBR. பாஸ்கர் GKM.மகுடீஸ்வரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் KPS.சத்தியமூர்த்தி மற்றும் ஆர்.கே.குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவை பொன்னான் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் தா.வெ.க மாவட்டச் செயலாளர் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

த.வெ.க மாவட்ட கழக செயலாளர் *பிறந்தநாள் நிகழ்ச்சி:-*தமிழக வெற்றிக் கழகம் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் GK கதிரவன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகிகளின் மூலம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மேலும் நல திட்ட உதவிகளும் வழங்கினார். …நிகழ்ச்சியில் வீரவாள் கழக தோழர்கள் பரிசளித்தார்….மேலும் கொள்கை தலைவர்களின் ஒருவரான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவம் சிலையை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக வழங்கப்பட்டது கலசப்பாக்கம் செய்தியாளர் M. வெங்கடேசன்
விபத்தை ஏற்படுத்தியதாகமாநகராட்சி துணை ஆணையாளர் கைது
மங்கலம் , ஜூன். 20கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 49). இவர் தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 10-ந் தேதி இவர் தனது காரில் பல்லடத்தில் இருந்து மங்களம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவருடைய கார், மங்கலம் நால்ரோடு அருகே வந்தது. அப்போது மங்களம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் (52) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது சரவணகுமார் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஹக்கீம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரவணகுமார் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.