
பொள்ளாச்சி வால்பாறை மெயின் ரோடு ஆவல்சினம்பாளையம் சுப்பிரமணியம் அவர்களின் மகன் நந்தகுமார் என்பவர் பொள்ளாச்சி கோவை மெயின்ரோட்டில் உள்ள சிடிசி டிப்போ பின்புறம் கடந்த நான்கு வருடமாக டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு டீக்கடை பூட்டிச் சென்ற நிலையில் காலையில் பார்த்த பொழுது கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.இது குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பொள்ளாச்சி கோவை மெயின் ரோடு சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக திருட்டுகள் நடைபெற்று வருகிறது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.