🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோதமாக மண் கொள்ளை.

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோதமாக மண் கொள்ளை.

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கிராவல் மண் உள்ளிட்ட மண்ணையும் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆட்சிக் காலத்திலேயே ஏரியில் இருந்து அதிகளவில் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுக்கப்பட்டதால், ஏரியின் பல பகுதிகளில் பாறைகள் வெளிப்படும் அளவுக்கு ஆழமான பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும், சில இடங்களில் கிணறு போன்ற ஆழமான குழிகளும் தோண்டப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.தற்போது, வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியை பயன்படுத்தி, கிராவல் மண்ணையும் சட்டவிரோதமாக அள்ளி விற்பனை செய்து வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், ஏரியில் உள்ள நான்கு கிணறுகள் மற்றும் பிற நீராதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே, சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, ஏரியில் எவ்வளவு அளவு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதுவரை எவ்வளவு மண் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கிட்டு, சட்டவிரோத மண் அள்ளுதலை உடனடியாக தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாவக்குறிச்சி கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் செய்தியாளர் பாலமுருகன்