திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ள பெண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர் பெங்களூர் வாழக்காய் மண்டியில் வேலை பார்த்து வருகின்றார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் சுண்டகாபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு மாடி வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இவர் தன் சொந்த ஊரான பெண்ணாத்தூரில் உள்ள வீட்டை புதுப்பிப்பதற்காக அங்குள்ள வீட்டு சாமான்களை சுண்டக்காபாளையம் புதிய வீட்டிற்கு மாற்றி அங்கு தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சொந்த ஊரான பெண்ணாத்தூர் திருவிழாவிற்கு சென்றிருக்கிறார். இவர்கள் சென்ற விஷயம் தெரிந்த யாரோ மர்ம நபர் இவர் வீட்டில் உள்ள முன் கதிவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று அங்கு பீரோவை உடைத்து 50 சவரன் தங்க நகையும் 10,000 ஆயிரம் ரொக்க பணமும் திருடி சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர் விரைந்து திருடு போன வீட்டை மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணரை வரவைத்து சோதனை செய்துள்ளனர். மற்றும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் P. பிரபு