🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவையில் கைதியை தப்பிக்க வைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர் கைது. கவன குறைவாக செயல்பட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் கைதியை தப்பிக்க வைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர் கைது. கவன குறைவாக செயல்பட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை,

கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் தளங்களில் கார் விற்பனை என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், சிறை கைதிகளை தங்க வைத்திருக்கக்கூடிய வார்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பியோடினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கைது அஜித்குமார் தப்பியோட காவலர் ஒருவரின் உதவியை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. அவரை தப்பிக்க வைக்க ஷேக் முகமது ரோஷன் என்ற காவலர் வந்து உதவியதும், இதற்காக அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவலர் ஷேக் முகமது ரோஷனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், அவருடன் பணியில இருந்த 3 காவலர்கள், கவனக்குறைவாக செயல்பட்ட காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தப்பியோடிய கைதி அஜித்குமாரை வந்து 5 மணி நேரத்தில் சேலம் மேச்சேரி பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.