🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் …

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே …

தமிழ்நாடு : தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தின் பல்​வேறு …

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் …

கோவை, கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • மோட்டார் வாகன ஆய்வாளர், விஏஓ உட்பட லஞ்சம் வாங்கிய 7 அதிகாரிகள் கைது

மோட்டார் வாகன ஆய்வாளர், விஏஓ உட்பட லஞ்சம் வாங்கிய 7 அதிகாரிகள் கைது

தமிழ்நாடு : தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களி​லும் லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கடந்த ஒரு வார​மாக தீவிர நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டனர். திருப்​பூர் மாநக​ராட்சி மண்​டலம்-3 இளநிலை பொறி​யாளர் சுப்​பிரமணி​யன், வடி​கால் பணிக்கு அளவீட்​டுப் பதிவேடு தயாரிப்​பது மற்​றும் ஏற்​க​னவே முடிக்​கப்​பட்ட சாலைப் பணி​களுக்​காக ரூ.5 லட்​சம் லஞ்​சம் வாங்​கிய​போது கைது செய்​யப்​பட்​டார். அவரது வீட்​டில் கணக்​கில் வராத ரூ.13 லட்​சம் பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.தூத்​துக்​குடி மாவட்​டம் கீழ​திருச்​செந்​தூர் கிராம நிர்​வாக அலு​வலர் சரவணன் (ரூ.10 ஆயிரம்), தேனி கிராம நிர்​வாக அலு​வலர் கார்த்​திக் (ரூ.5 ஆயிரம்), திண்​டுக்​கல் பிர்கா சர்​வேயர்​கள் முகமது இப்​ராகிம் (ரூ.5 ஆயிரம்), மீனாம்​பிகை (ரூ.10 ஆயிரம்) பட்டா பெயர் மாற்​றம் செய்ய லஞ்​சம் பெற்​ற​போது பிடிபட்​டனர். அதே​போல, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் 215 நெல் மூட்​டைகளுக்​கான கட்​ட​ணப் பட்​டியலை அனுப்ப, ஒரு மூட்​டைக்கு ரூ.50 வீதம் ரூ.10,750 லஞ்​சம் பெற்ற கட்​ட​ணப் பட்​டியல் வசூலிப்​பாளர் சவுந்​தர் கைது செய்​யப்​பட்​டார். திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் லாரிக்கு தகு​திச் சான்​றிதழ் புதுப்​பித்துதர ரூ.5,800 லஞ்​சம் கேட்ட மோட்​டார் வாகன ஆய்​வாளர் சண்​முக ஆனந்த் மற்​றும் அவருடன் இருந்த ஒரு நபர் கைது செய்​யப்​பட்​டனர்.பழைய ஊழல் வழக்​கு​களை விசா​ரித்த மாவட்ட முதன்மை மற்​றும் அமர்வு நீதி​மன்​றங்​கள் குற்​ற​வாளி​களுக்கு கடும் தண்​டனை​களை வழங்​கி​யுள்​ளன. விருத்​தாசலம் தாலுகா அலு​வலக சர்​வேயர் அண்​ணாதுரை, கிராம உதவி​யாளர் கண்​ணன் ஆகியோ​ருக்கு லஞ்ச வழக்​கில் 3 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை​யும், மொத்​தம் ரூ.10,000 அபராத​மும் விதித்து கடலூர் நீதி​மன்​றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்​பளித்​தது. மாத்​தூர் வட்​டார வளர்ச்சி அலு​வலக ஊரக நல அலு​வலர் இந்​தி​ராணிக்கு லஞ்ச வழக்​கில் 7 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை​யும், ரூ.4,000 அபராத​மும் வி​தித்து கிருஷ்ணகிரி நீதி​மன்​றம் கடந்த 9-ம்​ தேதி தீர்ப்​பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.