DVAC | RTO | Raid | RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37.81 லட்சம் பறிமுதல்
R.T.O அலுவலகங்களில் ரெய்டு – ரூ.37.81 லட்சம் பறிமுதல் தமிழகம் முழுவதும் 40 RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை சந்தேகத்திற்குரிய வகையில் ரூ.5.95 லட்சம் ஆன்லைன் பரிவர்த்தனைகள்
சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக(SP) ஐபிஎஸ் அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் பொறுப்பேற்புசேலம், ஜூன் 19:சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஐ.பி.எஸ். அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் அண்மைய ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு முன்பு சென்னை பெருநகர காவல்துறையில் தி.நகர் துணை ஆணையராக பணியாற்றிய குத்தாலிங்கம், தற்போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கவுதம் கோயல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.புதிய எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்துதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்த்தல் மற்றும் போக்குவரத்து ஒழுங்கை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் புதிய காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மாவட்டத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.

மக்காச்சோள பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சிதலைவாசல், ஜூன் 17:சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்திற்குட்பட்ட காமக்காபாளையம் கிராமத்தில், அட்மா (ATMA) திட்டத்தின் கீழ் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.அவர் பேசுகையில், “தலைவாசல் வட்டார விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வழி வேளாண்மைக்கு மாற வேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாத்து, சாகுபடி செலவைக் குறைப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும்,” என்றார்.தொடர்ந்து, பயிற்சியாளர் பிரவீன், முறையான மண் மாதிரி சேகரிப்பு முறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார். மேலும், பயிற்சியாளர் வரதராஜன், தரமான விதைத் தேர்வு மற்றும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நுண்ணீர் பாசன முறைகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட உதவி வேளாண்மை அலுவலர் ரவிக்குமார், வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் நடப்பு மானிய விவரங்கள் குறித்து விளக்கமளித்தார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரமேஷ் மற்றும் முத்துவேல் ஆகியோர் செய்திருந்தனர். இதில் காமக்காபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முற்போக்கு விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயனடைந்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
திருப்பத்தூர் இணைப்பதிவாளர் அலுவலகம்-2-ல் தொடரும் சர்ச்சைகள்.

*திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2-ல் தொடரும் சர்ச்சைகள்**சார் பதிவாளர் ஷர்மிளா மீதான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலுக்கும் கோரிக்கை*திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் அமைந்துள்ள திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2-ல் பணியாற்றி வரும் சார் பதிவாளர் ஷர்மிளா தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகள் மற்றும் புகார்கள் எழுந்து வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு பதிவு செய்து கொடுத்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், பதிவுத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இந்த நிலையில், திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2-ல் பத்திரப்பதிவுகளின் போது புரோக்கர்கள் மூலமாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும், இதன் மூலம் பெருமளவில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரால் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் தொடர்பாக ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, பதிவுத்துறையில் நடைபெறுவதாகக் கூறப்படும் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, பொறுப்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.இதற்கிடையே, திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-1-ல் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவே உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்து சார் பதிவாளர் ஷர்மிளா அலுவலகத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும், லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே சிலருக்கு தெரியவந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக அலுவலக வருகைப் பதிவேடுகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள், மருத்துவ ஆவணங்கள், அலுவலக கணினி பதிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சட்ட வல்லுநர்களின் கருத்துப்படி, பொது ஊழியர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழும் புகார்கள் ஆரம்பகட்ட ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், ஊழல் தடுப்புச் சட்டம், 1988, பாரதிய நியாய சன்ஹிதா, 2023, பதிவுச் சட்டம், 1908 மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான சட்ட வாய்ப்புகள் உள்ளன.மேலும், அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோத ஆதாயம், ஆவண முறைகேடுகள், பொது நம்பிக்கை மீறல், கூட்டுச் சதி மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் உள்ளிட்ட கோணங்களிலும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் பெற்றுள்ளனர் என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதற்காக சம்பந்தப்பட்ட பதிவு ஆவணங்கள், சொத்து விவரங்கள், வங்கி பரிவர்த்தனைகள், அலுவலக பதிவேடுகள், கணினி தரவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக வலுத்து வருகிறது.அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில், திருப்பத்தூர் இணைபதிவாளர் அலுவலகம்-2 தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் பாரபட்சமற்ற, வெளிப்படையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.இருப்பினும், விசாரணை அமைப்புகள் அல்லது நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படும் வரை, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் குற்றமற்றவர் என்ற அடிப்படை சட்டக் கொள்கை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அமைச்சர் N. ஆனந்த் எம் எல் ஏ அவர்கள் வீடு இல்லாதவருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டமன்றத் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!இவ்விழாவில், *திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப அவர்கள் தலைமை வகிக்க, போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.R.அபிஷேக் அவர்கள் முன்னிலை வகித்தார்.**நலத்திட்ட உதவிகள்**வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 584 வீட்டுமனை பட்டா, 102 உட்பிரிவு பட்டா மாறுதல், 18 பட்டா மாறுதல், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக 4 பேருக்கு சக்கர நாற்காலி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு திட்டம் சார்பாக 703 புதிய குடும்ப அட்டை, கைத்தறி துறை சார்பாக 20 பேருக்கு தறி மற்றும் தறி உபகரணங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 10 பேருக்கு இலவச தையல் இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.*மேலும் *வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் மற்றும் TNRTP, தாட்கோ, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றின் கீழ் என மொத்தமாக 3836 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன… கலசப்பாக்கம் செய்தியாளர் M. வெங்கடேசன்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை ips இயக்கத்தின் ஆதரவாளர்கள் புதிய நிர்வாகிகளை இயக்கத்தில் இணைத்தனர்

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை அவர்களின் ஆதரவாளர்கள் பந்தல் அமைத்து புதிய நிர்வாகிகளை இயக்கத்தில் இணைத்தனர். மாவட்ட செய்தியாளர் P. பிரபு
மோட்டார் வாகன ஆய்வாளர், விஏஓ உட்பட லஞ்சம் வாங்கிய 7 அதிகாரிகள் கைது
தமிழ்நாடு : தமிழகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர், இளநிலை பொறியாளர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன், வடிகால் பணிக்கு அளவீட்டுப் பதிவேடு தயாரிப்பது மற்றும் ஏற்கனவே முடிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் கீழதிருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் (ரூ.10 ஆயிரம்), தேனி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் (ரூ.5 ஆயிரம்), திண்டுக்கல் பிர்கா சர்வேயர்கள் முகமது இப்ராகிம் (ரூ.5 ஆயிரம்), மீனாம்பிகை (ரூ.10 ஆயிரம்) பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றபோது பிடிபட்டனர். அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் 215 நெல் மூட்டைகளுக்கான கட்டணப் பட்டியலை அனுப்ப, ஒரு மூட்டைக்கு ரூ.50 வீதம் ரூ.10,750 லஞ்சம் பெற்ற கட்டணப் பட்டியல் வசூலிப்பாளர் சவுந்தர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் லாரிக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பித்துதர ரூ.5,800 லஞ்சம் கேட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் மற்றும் அவருடன் இருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டனர்.பழைய ஊழல் வழக்குகளை விசாரித்த மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகளை வழங்கியுள்ளன. விருத்தாசலம் தாலுகா அலுவலக சர்வேயர் அண்ணாதுரை, கிராம உதவியாளர் கண்ணன் ஆகியோருக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.10,000 அபராதமும் விதித்து கடலூர் நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி தீர்ப்பளித்தது. மாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊரக நல அலுவலர் இந்திராணிக்கு லஞ்ச வழக்கில் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் இறந்தவர் உடலை புதைப்பதில் பிரச்சனை.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இன்று அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் சுப்பராயன் காலமானார். உடலை அந்த சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்டபோது பட்டா பெற்ற தனியார் தரப்பினர் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நிருவாகிகள் வட்டாட்சியரிடம் போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஜி.கே.கதிரவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட ஊடகப் பிரிவு அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட வணிகர் சங்க அமைப்பாளர் பாண்டித்துரை ஆனந்த் மாவட்ட செயற்குழு உறுப்பினர் MR ஆனந்த் ஒன்றிய நிர்வாகி புவனேஷ்ஒன்றிய இளைஞரணிகுருபாலன்ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்மற்றும் காரப்பட்டு த.வெ.க நிருவாகிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், முதியவரின் உடல் காலங்காலமாக புதைக்கப்பட்ட அதே சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. M.வெங்கடேசன் கலசப்பாக்கம் செய்தியாளர்
கோவையில் கைதியை தப்பிக்க வைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவலர் கைது. கவன குறைவாக செயல்பட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் தளங்களில் கார் விற்பனை என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், சிறை கைதிகளை தங்க வைத்திருக்கக்கூடிய வார்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பியோடினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கைது அஜித்குமார் தப்பியோட காவலர் ஒருவரின் உதவியை பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. அவரை தப்பிக்க வைக்க ஷேக் முகமது ரோஷன் என்ற காவலர் வந்து உதவியதும், இதற்காக அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவலர் ஷேக் முகமது ரோஷனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், அவருடன் பணியில இருந்த 3 காவலர்கள், கவனக்குறைவாக செயல்பட்ட காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தப்பியோடிய கைதி அஜித்குமாரை வந்து 5 மணி நேரத்தில் சேலம் மேச்சேரி பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்.

திருவண்ணாமலை to காஞ்சி சாலையில் விஸ்வநாதபுரம் கூட்டு சாலை அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்கு எதிர்ப்புறம் திரும்பிய கார் நிலை தடுமாறி சாலை விபத்தில் சிக்கியது அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள் கார் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்து விட்டது M. வெங்கடேசன் கலசப்பாக்கம் செய்தியாளர்