வீடு புகுந்து 50 பவுன் தங்க நகை கொள்ளை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ள பெண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர் பெங்களூர் வாழக்காய் மண்டியில் வேலை பார்த்து வருகின்றார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் சுண்டகாபாளையம் கிராமத்தில் உள்ள ஒரு மாடி வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இவர் தன் சொந்த ஊரான பெண்ணாத்தூரில் உள்ள வீட்டை புதுப்பிப்பதற்காக அங்குள்ள வீட்டு சாமான்களை சுண்டக்காபாளையம் புதிய வீட்டிற்கு மாற்றி அங்கு தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சொந்த ஊரான பெண்ணாத்தூர் திருவிழாவிற்கு சென்றிருக்கிறார். இவர்கள் சென்ற விஷயம் தெரிந்த யாரோ மர்ம நபர் இவர் வீட்டில் உள்ள முன் கதிவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று அங்கு பீரோவை உடைத்து 50 சவரன் தங்க நகையும் 10,000 ஆயிரம் ரொக்க பணமும் திருடி சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர் விரைந்து திருடு போன வீட்டை மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணரை வரவைத்து சோதனை செய்துள்ளனர். மற்றும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர். மாவட்ட செய்தியாளர் P. பிரபு
சேலம் மாவட்டம் ஏறி ஆக்கிரமிப்புகளை வட்டார வளர்ச்சி அதிகாரி அகற்றினார்.

நாவக்குறிச்சி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது.நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ஏரிப் பகுதியில் சட்டவிரோதமாக செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.நீர்நிலைகளின் பரப்பளவை பாதுகாத்து, மழைநீர் சேமிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யாமல் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
எம் பி சிவலிங்கம் அவர்களுக்கு நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்ததுதி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துசேலம், ஜூன் 10–சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.இதையொட்டி தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் வாழ்த்து பதிவுகளை வெளியிட்டு தங்களது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர்.பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவாசல் மத்திய ஒன்றிய கழக செயலாளர் சாத்தப்பாடி மணி (எ) க. பழனிசாமி, முன்னாள் ஒன்றிய கழக பொறுப்பாளர் வரகூர் செ. செயபாலன், மாவட்ட பிரதிநிதி மு. தேவேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சித்தேரி ப. கண்ணுசாமி, காமக்காபாளையம் கிளை கழக செயலாளர் அ. செல்லையா, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நாவக்குறிச்சி மேலமலை, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளரும் நாவலூர் கிளை கழக செயலாளருமான கூ. கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.கழக வளர்ச்சிக்கும், மக்கள் நலப் பணிகளுக்கும் தொடர்ந்து பாடுபட்டு வரும் எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.பிறந்தநாளையொட்டி பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு கீழ்பெண்ணாத்தூரில் தமிழ்நாடு வெற்றி கழகம் அலுவலகம் திறப்பு விழா.

தமிழக வெற்றிக் கழகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின்படிகழக பொதுச் செயலாளர்மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு N ஆனந்த்அவர்களின் நல்வழியில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் நகரம் அலுவலகம் திறப்பு விழா!!!!தலைமை & அலுவலக திறப்பு திரு GK கதிரவன் மாவட்ட கழக செயலாளர் உடன் திரு ஆட்டோ நடராஜன் கீழ்பெண்ணாத்தூர் நகர செயலாளர் திரு ஜேசுதாஸ் கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள்!!!கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்….நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை தெரிந்து வைத்து கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்க வெங்கடேஷ் க்ரைம் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கலசப்பாக்கம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் டீ கடையில் பூட்டை உடைத்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள பணம் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் ;
பொள்ளாச்சி வால்பாறை மெயின் ரோடு ஆவல்சினம்பாளையம் சுப்பிரமணியம் அவர்களின் மகன் நந்தகுமார் என்பவர் பொள்ளாச்சி கோவை மெயின்ரோட்டில் உள்ள சிடிசி டிப்போ பின்புறம் கடந்த நான்கு வருடமாக டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு டீக்கடை பூட்டிச் சென்ற நிலையில் காலையில் பார்த்த பொழுது கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.இது குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பொள்ளாச்சி கோவை மெயின் ரோடு சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக திருட்டுகள் நடைபெற்று வருகிறது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது. அண்ணாமலை வந்ததால் பா.ஜ.க பலமடையவும் இல்லை; அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை. அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள். பொதுநலவாதிகள் பா.ஜ.க.விலேயே தொடருகின்றனர். தாமரையில் இருந்து ஒரு இதழை கூட யாராலையும் அசைக்க முடியாது.கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கு ஆதரவும் கிடையாது; வாழ்த்தும் கிடையாது. புதிய இயக்கத்தில் லட்சம் பேர் இணைகிறார்கள் என்பது எங்களுக்கு பொருட்டல்ல; லட்சியவாதிகள் எங்களுடன் இருக்கின்றனர். வேறு முகத்தைக் காண்பித்து பா.ஜ.கவுக்கு மாற்று சக்தியைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு
கோவை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட அறிவிக்கப்படாத சர்ச்சைகள் தான் ஏராளமான உள்ளன. முதலமைச்சர் விஜயும், அமைச்சர்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் மோகத்துடன் வலம் வருவது, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவது நடந்து வருகிறது. அந்த வரிசையில் மூத்த அமைச்சர் செங்கோட்டையனும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் பேசியதால், செய்தியாளர்கள் கோபமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி விளம்பரம்: கோவையில் தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி எச்சரிக்கை!
கோவை : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் புதிய விதிகள் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் அதன் புதிய விதிகள், 2023-ன் படி, பொது இடங்களில் விளம்பரத் திரைகள் (Electronic display screens), விளம்பரப் பலகைகள் (Hoardings) அல்லது பேனர்களை வைக்க விரும்பும் தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ குறைந்தது 15 நாட்களுக்கு முன்பே மாநகராட்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்தி, மாநகராட்சியிடம் இருந்து முறையான ஒப்புதல் கடிதத்தைப் பெற்ற பின்னரே விளம்பரங்களை வைக்க வேண்டும்.அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடும் பட்சத்தில், விளம்பரம் கொடுத்த நிறுவனங்கள் மட்டுமன்றி, அந்த விளம்பரங்களை அச்சிட்ட அச்சகங்கள் (Printing Agencies) மீதும் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.சிறைத்தண்டனை மற்றும் அபராத விபரங்கள் விதிமீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் சட்டம் 117-U பிரிவின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன:விளம்பரப் பலகைகள் (Hoardings):மாநகராட்சி அனுமதியின்றிப் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் அல்லது இரும்பு உள்கட்டமைப்புகளை நிறுவுபவர்களுக்கு3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைஅல்லது₹20,000 அபராதம், அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம்.பிளெக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள்:தற்காலிக பிளெக்ஸ் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுபவர்களுக்குஓராண்டு வரை சிறைத்தண்டனைஅல்லது₹5,000 வரை அபராதம், அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில் புதிய பதவிகள்: அரசாணை வெளியீடு
கல்வி : பள்ளிக்கல்வித் துறையில் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறைசெயலர் ப.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: பள்ளிக்கல்வித் துறையின் அரசு தேர்வுத்துறையில் புரோகிராமர், தமிழ்நாடு பொது சார்நிலை பணியின்கீழ் கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பணியில் உடற்கல்வி பாடவிரிவுரையாளர் ஆகியபதவிகள் உருவாக்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது. விரைவில் அந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடற்கல்வி விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவும் புரோகிராமர்,கான்சோல் ஆபரேட்டர் மற்றும் மெஷின் சூப்பர்வைசர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் நிரப்பப்படும்.
பொறந்த குழந்தையோட போய் நின்னேன்; அவமானப்படுத்தி அனுப்புறாங்க!’ – தவெக எம்.எல்.ஏ!
“என்னுடைய கைக்குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மேயர் பிரியாவும் வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக கூட அவர் வணக்கம் வைக்கவோ சிரிக்கவோ தயாராக இல்லை. நானும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பில் பள்ளிக்கட்டிடம் திறக்கும் விழா ஒன்றில், மேயர் பிரியாவால் தவெக எம்.எல்.ஏ பல்லவி புறக்கணிக்கப்படதாக குற்றம் சாட்டியுள்ளார்.