🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், அழுகிய சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது.சிதைந்த முகம் – அடையாளம் காண்பதில் சிக்கல்..மீட்கப்பட்ட பெண்ணின் முகம் முற்றிலும் …

சேலத்தில் 22-வது ஆண்டு மெகா பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறதுசேலம்:தமிழ்நாடு வீரசைவப் பேரவை, தலைமை ஜங்கம் சமூக நலச்சங்கம் மற்றும் நாகரத்தினம் அங்காளம்மாள் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 22-வது …

இன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் வால்பாறை மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி அறம் மருத்துவமனை மற்றும் அறம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு முகாம் நடைபெற்றது இம்முகாமை …

த.வெ.க மாவட்ட கழக செயலாளர் *பிறந்தநாள் நிகழ்ச்சி:-*தமிழக வெற்றிக் கழகம் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் GK கதிரவன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகிகளின் மூலம் சிறப்பாக கொண்டாடப்பட்டது…நிகழ்ச்சியில் …

மங்கலம் , ஜூன். 20கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 49). இவர் தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் …

முக்கிய செய்தி

புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலை

புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை நாளைய தினம் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.இதுகுறித்து அண்ணாமலை புதன்கிழமை கூறுகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) ஊடக சந்திப்பை நடத்தி எனது நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்கவுள்ளேன். முதல்கட்டமாக ஓா் இயக்கத்தைத் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஒன்றரை ஆண்டுகள் அந்த இயக்கத்தை நடத்தி, நிா்வாகிகள், தொண்டா்களுக்கு அரசியல் பயிற்சியை அளித்துவிட்டு, அதன் பின்னா் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளேன் என்றாா்.

முதல் அமைச்சரவைக் கூட்டம் :

முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 5, 2026 அன்று காலை 11:00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்!

சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் அரசு பணியிலிருந்து மே 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப. சுமதி, ஜூன் 2 ஆம் தேதி முதல் சட்டத் துறையின் செயலாளராக நீயமிக்கப்பட்டுள்ளார்.இந்நியமனத்தின்மூலம், சட்டத் துறையின் செயலாளர் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை ப. சுமதி பெறுகிறார். இது சட்டத் துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்.

CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வகுப்பு வாரியாக கட்டண விவரங்களை வெளிப்படையாக எழுதி நுழைவு வாயிலில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா..

தமிழ்நாடு: தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 75 ஆண்டுகளில், உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றாமல், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த 11வது நபர் என்ற அரிய சாதனையை அவர் படைத்துள்ளார்.தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியுள்ள 2-வது பெண் என்ற பெருமையையும், வழக்கறிஞர் நிலையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இவரது நியமனம் நீதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

“எங்கள் தலைவா தலைமை ஏற்க வா…” – கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

கோவை: தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, “எங்கள் தலைவா தலைமை ஏற்க வா…!” என்ற அதிரடி வாசகங்களுடன் கோவையின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளது. இப்பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கனிம வள அதிகாரிகள் மற்றும் அதன் பகுதியில் உள்ள காவல்துறையினர்களுக்கு குவாரி உரிமையாளர்கள் கணிசமாக மாதம் மாதம் கவனித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.இது தொடர்பாக பேசிய விவசாயிகள் பலகட்ட போராட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.. குறிப்பிட்ட அளவு மட்டுமே வெட்டி எடுக்க அனுமதி உண்டு. ஆனால் குவாரியில் வெடிபொருட்கள் நிரப்பி வெடிக்க செய்து டாரஸ் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர்.குவாரியில் தேங்கும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள ஓடையில் கலக்கிறது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

திருவண்ணாமலை புதிய மாவட்ட ஆட்சியராக வந்தனா கார்க் இன்று பதவி ஏற்றார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

கோவையில் பெட்ரோல் நிரம்பிய பீர் பாட்டில் வீசி தாக்குதல், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை:

கோவை தொண்டாமுத்தூர் அருகே கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில், இன்ஸ்டாகிராம் காதலை முறித்ததால் ஆத்திரமடைந்த சென்னை ரவுடி கார்த்தி என்கிற மாரியப்பன் (30), தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் வாசலில் இருந்த காலணி ஸ்டாண்ட் தீப்பற்றியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திண்டுக்கல்லில் குண்டாஸ் வழக்கில் சிறை சென்ற கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது 3 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பெரிய கடை வீதியில் 1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்க முயற்சி:

பெரிய கடை வீதி பகுதியில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கோவையில் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ. 37.5 லட்சம் மதிப்புள்ள மூலப்பொருள் திருட்டு தொடர்பாக ஸ்டோர் மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.