🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளது. இப்பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கனிம வள அதிகாரிகள் மற்றும் அதன் பகுதியில் உள்ள காவல்துறையினர்களுக்கு குவாரி உரிமையாளர்கள் கணிசமாக மாதம் மாதம் கவனித்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.இது தொடர்பாக பேசிய விவசாயிகள் பலகட்ட போராட்டம் நடத்தினாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.. குறிப்பிட்ட அளவு மட்டுமே வெட்டி எடுக்க அனுமதி உண்டு. ஆனால் குவாரியில் வெடிபொருட்கள் நிரப்பி வெடிக்க செய்து டாரஸ் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர்.குவாரியில் தேங்கும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள ஓடையில் கலக்கிறது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.