சேலம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் பொறுப்பேற்புசேலம், ஜூன் 19:சேலம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) ஐ.பி.எஸ். அதிகாரி எஸ். குத்தாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் அண்மைய ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு முன்பு சென்னை பெருநகர காவல்துறையில் தி.நகர் துணை ஆணையராக பணியாற்றிய குத்தாலிங்கம், தற்போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கவுதம் கோயல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.புதிய எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்துதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்த்தல் மற்றும் போக்குவரத்து ஒழுங்கை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் புதிய காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மாவட்டத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்
சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் சிறை வார்டன்,சிறை காவலர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். தேனி சிறையின் தலைமை சிறைக்காவலர்கள் …
