
பாலியல் புகாருக்குள்ளான ஜெம் வீரமணி மீது, பாதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கிலும் வீரமணியின் பெண் தோழியான சாந்தியின் வீட்டிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) விசாரணையில் தெரியவந்துள்ளது என SIT அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது