திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி பின்னுக்கு தள்ளி 14036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் எம்எல்ஏ சாமிக்கண்ணு அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வேலு அவர்கள் வெற்றி பெற்றவுடன் செங்கத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் செங்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை. டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து செங்கம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். அதிமுக சார்பாக நிர்வாகிகள் வான வேடிக்கையும் பட்டாசுகளையும் வெடித்து வரவேற்றனர்.
மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு