சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் சிறை வார்டன்,சிறை காவலர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். தேனி சிறையின் தலைமை சிறைக்காவலர்கள் 2 பேர், முதல் நிலை சிறைக்காவலர் ஒருவர், பாதுகாப்பு பணியில் இருந்த 2ம் நிலை சிறைக்காவலர்கள் 6 பேர் என மொத்தம் 9 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

தேனி மாவட்ட சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே உள்ளது. இந்த சிறையில் 4 பிளாக்குகள் உள்ளன. நேற்றிரவு 3ம் பிளாக்கில் ஒரு கைதிக்கு வலிப்பு வந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து சிறப்பு எஸ்.ஐ., மதன்மோகன் பிளாக்கை திறந்தார்.