
POSCO வழக்கில் தொடர்புடைய GEM கிரானைட் வீரமணி மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கில், காவல்துறை அதிகாரி அருண் IPS மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், தொழிலதிபர் வீரமணி மீதான வழக்கை சாதகமாக முடித்து வைக்க அவரது நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் ரூ.147.87 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கைமாறியதாகக் கூறப்பட்டுள்ளது.
முறைகேடாக வழக்கை முடித்து வைக்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.