🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அனைத்து லாரி உரிமையாளர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவா அர்ஜுனாவிடம் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அனைத்து லாரி உரிமையாளர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவா அர்ஜுனாவிடம் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் வட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் ஏரி வண்டல் மண் எடுத்து செங்கம் வட்டத்தில் உள்ள விவசாயப் பணிகளை தடையின்றி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏதுவாக இருந்து வந்தது என்றும் கடந்த இரண்டு மாதங்களாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தடை உத்தரவின் பேரில் எந்த ஒரு டிப்பர் லாரியும் இயங்காமல் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகவும் பெருத்த கஷ்டத்திலும். நஷ்டத்திலும் சுமார் 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி உரிமையாளர்களும்.ஓட்டுநர்களின் குடும்பமும். மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகிறது. தற்போதுள்ள தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த விவசாய மக்களுக்கு ஏரி வண்டல் மண். மற்றும் பொதுமக்கள் வீட்டு பயன்பாட்டிற்காக கிராவல் மண் அரசாணை rule 12(2) மற்றும்12 (2-A)கொடுக்கப்பட்ட உத்தரவின் பெயரில் கம்மாய். ஏரி. குளம். மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து களிமண். வண்டல் மண். சவுடு. சரலை . போன்றவை விவசாயம். மண்பாண்டம் செய்வதற்காகவும். மற்றும் சொந்த வீடு பயன்பாட்டுக்காகவும். எடுத்துச் செல்ல அரசாணை வழங்கி உள்ளார். அதன்படி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிந்துரை செய்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் தடையின்றி தொடர வழிவகை செய்யுமாறும் மனுவில் கொடுக்கப்பட்டுள்ளன.

செய்தியாளர் P. பிரபு