🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி வட்டாரம் மருசூர் அங்கன்வாடி பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சீனிவாசன் அறக்கட்டளை இணைந்து ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு போளூர் ஆரணி …

செங்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து தவெக நிர்வாகி வெளியிட்ட பதிவால் சர்ச்சை!செங்கம் பகுதியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் …

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி செங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வினாடி வினா போட்டிசெங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் …

செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் பங்கேற்புஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சீலியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. …

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து த வேக நிர்வாகி வெளியிட்ட பதிவாள் சர்ச்சை இது போன்ற சில நிர்வாகிகளால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து த வேக நிர்வாகி வெளியிட்ட பதிவாள் சர்ச்சை இது போன்ற சில நிர்வாகிகளால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.

செங்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து தவெக நிர்வாகி வெளியிட்ட பதிவால் சர்ச்சை!செங்கம் பகுதியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படும் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மில்லத் நகரைச் சேர்ந்த தவெக நிர்வாகி இம்ரான் என்பவர், தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தையும் பயன்படுத்தி, முதலமைச்சரே கண்டிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.பல ஆண்டுகளாக உரிய அனுமதிகளுடன் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை புதியதாக நடைபெறும் நிகழ்வு போன்று சித்தரித்து, இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கும் வகையில் அந்தப் பதிவு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி அவரே கண்டிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதுடன், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி எனக் கூறி, அப்பதிவு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.அனைத்து மதத்தினரின் ஒத்துழைப்புடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடனும் நடைபெறும் நிகழ்வை சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சித்தரிப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு தலைமைச் செய்தியாளர் M. சங்கர்