நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாபு த/பெ. லோகா என்பவர் நரிக்குறவர் சங்கத் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில், வறுமையின் விளிம்பில் வாழ்ந்து வரும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தச்சூர் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட காலி மனைகளில், தமிழக அரசின் வெற்றி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், வீடு இல்லாமல் சிரமப்பட்டு வரும் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் அடிப்படை தேவைகளையும் கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் P.பிரபு