🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களுக்கு இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு

கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களுக்கு இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு

கோவை: பல ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு விவகாரத்தால், விசைத்தறியாளர்கள் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்த கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி, சுமார் 4 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றன.
1990-ம் ஆண்டு முதல் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி ஒப்பந்தம் செய்து வந்தனர். ஆனால், தற்போது ஜவுளி உற்பத்தியாளர்களிடம் உரிய கூலி வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டமாக உள்ளது.விசைத்தறியாளர்கள் கூறும்போது, “தொழிலாளர்களின் சம்பள உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு, மின் கட்டணம், தொழிலாளர்களின் வீட்டு வாடகை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது.
இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், வேறு தொழிலுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். உரிய கூலியை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.