🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • SPIRITUALITY /
  • Temple /
  • சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையை நோக்கி குவிந்த வாகனங்களும் மக்கள் கூட்டங்களும்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையை நோக்கி குவிந்த வாகனங்களும் மக்கள் கூட்டங்களும்

திருவண்ணாமலையில் மாதந்தோறும் சாதாரண நாட்களிலும் பௌர்ணமி அன்றும் மக்கள் கூட்டம் கிரிவலம் சுற்றும் வழக்கம் ஆந்திரா. கேரளா. கர்நாடகா மற்றும் சில மாநிலங்களில் இருந்தும் பல வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் கிரிவலம் சுற்றுவது வழக்கம். அதுமட்டுமின்றி வெளிநாட்டவர்கள் ஆன்மீக பூமியான திருவண்ணாமலையின் ரமணாஸ்வரம் விசிறி சாமியார் ஆசிரமங்கள் மற்றும் இன்னும் சில ஆசிரமங்கள் சென்று யோகாவில் ஈடுபட்டு அமைதியான சூழ்நிலையையும் இந்து கலாச்சாரத்தையும் மிகவும் விருப்பத்துடன் பின்பற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அதிகப்படியான சித்தர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. கிரிவலம் சுற்றுவது மூலமாக மக்கள் வேண்டுதல் நிறைவேறுகின்றது என்று கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று 30/04/2026 இரவு 9:51 PM அளவில் சித்ரா பௌர்ணமி தொடங்கி இன்று 01/05/2026 இரவு 11:07 வரை நீடிக்கும். எனவே சாதாரண நாட்கள் மற்றும் பௌர்ணமி நாட்கள் சுற்றுவதை விட இந்த வருட சித்ரா பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர். இந்தச் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதினால் இந்த வருடம் முழுவதும் கிரிவலம் வந்து விரதம் இருப்பதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இன்றி அனைத்து வாகனங்களும் அங்கேயும் நிறுத்தப்பட்டு கிரிவலம் சுற்றி மீண்டும் தங்கள் ஊருக்கு செல்ல தவிக்கின்றனர். இதனால் திருவண்ணாமலை உள்ளூர் வாசிகளும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.

மாவட்டச் செய்தியாளர். பு பிரபு