🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • திருச்செந்தூரில் தரிசனத்திற்கு அமைச்சர் என்று தெரியாமல் ரூ.4,000 கேட்ட அர்ச்சகர்கள்…

திருச்செந்தூரில் தரிசனத்திற்கு அமைச்சர் என்று தெரியாமல் ரூ.4,000 கேட்ட அர்ச்சகர்கள்…

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது முறைகேடான வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல சில அர்ச்சகர்கள் ரூ.4,000 கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் நேரடியாக ஜி-பே (GPay) மூலம் ரூ.4,000 பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அவர் அமைச்சர் என்பது தெரியவந்த நிலையில், பணம் பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாக சிக்கினர்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்று வந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து அமைச்சர் விசாரணை நடத்தினார். ஆய்வின் போது பக்தர்களிடம் விதிமுறைகளை மீறி பணம் வசூலித்தது உள்ளிட்ட பல குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதுடன், தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் எழுதித் தருமாறு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு மற்றும் அதிரடி நடவடிக்கை திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விரைவு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களிடம் முறைகேடாக ரூ.2,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக சென்னையை சேர்ந்த சண்முகராஜன், ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு, பக்தர்கள் அமைதியான முறையில் வழிபட தேவையான ஏற்பாடுகளை செய்வது அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் கடமை என தெரிவித்தது.
மேலும், பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் அங்கீகாரமற்ற நபர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.