🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • அனுமதியின்றி விளம்பரம்: கோவையில் தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி எச்சரிக்கை!

அனுமதியின்றி விளம்பரம்: கோவையில் தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி எச்சரிக்கை!

கோவை : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் புதிய விதிகள் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் அதன் புதிய விதிகள், 2023-ன் படி, பொது இடங்களில் விளம்பரத் திரைகள் (Electronic display screens), விளம்பரப் பலகைகள் (Hoardings) அல்லது பேனர்களை வைக்க விரும்பும் தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ குறைந்தது 15 நாட்களுக்கு முன்பே மாநகராட்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான உரிய கட்டணத்தைச் செலுத்தி, மாநகராட்சியிடம் இருந்து முறையான ஒப்புதல் கடிதத்தைப் பெற்ற பின்னரே விளம்பரங்களை வைக்க வேண்டும்.
அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடும் பட்சத்தில், விளம்பரம் கொடுத்த நிறுவனங்கள் மட்டுமன்றி, அந்த விளம்பரங்களை அச்சிட்ட அச்சகங்கள் (Printing Agencies) மீதும் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைத்தண்டனை மற்றும் அபராத விபரங்கள்

விதிமீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் சட்டம் 117-U பிரிவின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன:
விளம்பரப் பலகைகள் (Hoardings):
மாநகராட்சி அனுமதியின்றிப் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் அல்லது இரும்பு உள்கட்டமைப்புகளை நிறுவுபவர்களுக்கு
3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
அல்லது
₹20,000 அபராதம்
, அல்லது இவ்விரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம்.
பிளெக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள்:
தற்காலிக பிளெக்ஸ் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுபவர்களுக்கு
ஓராண்டு வரை சிறைத்தண்டனை
அல்லது
₹5,000 வரை அபராதம்
, அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.