🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • விபத்தை ஏற்படுத்தியதாகமாநகராட்சி துணை ஆணையாளர் கைது

விபத்தை ஏற்படுத்தியதாகமாநகராட்சி துணை ஆணையாளர் கைது

மங்கலம் , ஜூன். 20
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 49). இவர் தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 10-ந் தேதி இவர் தனது காரில் பல்லடத்தில் இருந்து மங்களம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவருடைய கார், மங்கலம் நால்ரோடு அருகே வந்தது. அப்போது மங்களம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் (52) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது சரவணகுமார் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஹக்கீம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரவணகுமார் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.