🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவையில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு: பாலியல் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு: பாலியல் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், அழுகிய சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது.சிதைந்த முகம் – அடையாளம் காண்பதில் சிக்கல்..மீட்கப்பட்ட பெண்ணின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்களை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை.அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகமும் எழுந்துள்ளது.

தீவிரமடையும் போலீஸ் விசாரணை..

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு கிடைத்த முக்கிய ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காகவும், பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்துள்ளதா என்பதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குனியமுத்தூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் கோவையில் மாயமான பெண்களின் விபரங்களை வைத்து போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்