🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

10 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் இல்லாமல் தவிக்கும் நரசிங்கநல்லூர் கிராம மக்கள்!4 கி.மீ. தூரம் ஆபத்தான பாதையில் குழந்தைகள் பயணம் – 61 குழந்தைகளுக்கு கல்வி, மதிய உணவு கிடைக்காத …

காவலர் தின நிகழ்ச்சியில் போலீசார் உறுதிமொழி ஏற்புசேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் …

திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் …

நரிக்குறவர் இன மக்களுக்கு அரசு வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சூர் கிராமத்தில் வசிக்கும் 40 நரிக்குறவர் இன மக்களுக்கு தமிழக அரசின் வெற்றி வீடு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கவன ஈர்ப்பு ஊர்வலம். ஆர்ப்பாட்டம். தோழர்.மு. அறிவழகன் தலைவர். தலைமையில்.ஆகஸ்ட் 24. சாத்தனூர் நீர்த்தேக்கம் பகுதியில் உயிர் பலி ஏற்படுவதைத் தடுத்து …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • S.P.வேலுமணியால் நடந்த சதி.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத கோவை அதிமுக மாவட்ட செயலாளர். செ.ம .வேலுச்சாமி :

S.P.வேலுமணியால் நடந்த சதி.. மேடையில் கண்ணீர் விட்டு அழுத கோவை அதிமுக மாவட்ட செயலாளர். செ.ம .வேலுச்சாமி :

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,
“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. தூய சக்தி என கூறி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது அந்த கட்சியின் பெண் வழக்கறிஞர் ஒருவரே, தமிழகம் முழுவதும் பணம் பெற்று கொண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.கட்சி தொடங்கியதில் இருந்தே நான் பதவியுடன் இருந்தேன். கடந்த 13 வருட காலமாக கட்சியில் பதவியின்றி பல்வேறு அவமானங்களை சந்தித்தேன். பல கட்சிகளில் இருந்து எனக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை தர முன்வந்தனர். பணம் கொடுத்தும் என்னை அழைத்தனர். நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. எங்கோ இருந்த என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பி அமைச்சராக்கியதும், பிறகு மேயராக்கியதும் இந்த கட்சி தான். எனக்கு அவமானம் ஏற்படும்போது வேறு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்துள்ளேன் என்றும் கண்ணீர் மல்க பேசினார்.