திருவண்ணாமலை மாவட்டம் 🚨🚨⚡ அடிப்படை வசதிகள் இல்லாத சுங்கச்சாவடி… இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்!திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா காரியமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில், பல நாட்களாக முக்கியமான மின்விளக்குகள் எரியாமல் இருப்பதாகவும், இதனால் சுங்கச்சாவடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இரவு நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கியமான சாலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இருள் காரணமாக எதிரே வரும் வாகனங்கள், சாலையில் உள்ள தடுப்புகள் உள்ளிட்டவற்றை சரியாகக் கவனிக்க முடியாத நிலை ஏற்படுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.🚨 கட்டணம் வசூலிப்பதில் கவனம்… அடிப்படை வசதிகளில் அலட்சியமா?சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் கட்டணம் முறையாக வசூலிக்கப்படும் நிலையில், அதற்கேற்ப பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.குறிப்பாக, சுங்கச்சாவடியில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் போதிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்றும், சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாகவும் புகார் எழுந்துள்ளது.சுத்தம் மற்றும் சுகாதார வசதிகள் முறையாக இல்லாத நிலையில், பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்தும்போது நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.❓ நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, மின்விளக்கு, குடிநீர், கழிவறை மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.“பண வசூலிப்பதில் காட்டப்படும் அக்கறை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதிலும் காட்டப்பட வேண்டும்” என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.மேலும், பல நாட்களாக மின்விளக்குகள் எரியாதது மற்றும் சுகாதார வசதிகள் முறையாக இல்லாதது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகம் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.👉 சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைத்து, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை முறையாக பராமரித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செய்தியாளர் S. ராமலிங்கம்