திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இன்று அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் சுப்பராயன் காலமானார். உடலை அந்த சுடுகாட்டில் அடக்கம் செய்ய முற்பட்டபோது பட்டா பெற்ற தனியார் தரப்பினர் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நிருவாகிகள் வட்டாட்சியரிடம் போராட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஜி.கே.கதிரவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட ஊடகப் பிரிவு அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட வணிகர் சங்க அமைப்பாளர் பாண்டித்துரை ஆனந்த் மாவட்ட செயற்குழு உறுப்பினர் MR ஆனந்த் ஒன்றிய நிர்வாகி புவனேஷ்ஒன்றிய இளைஞரணிகுருபாலன்ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்மற்றும் காரப்பட்டு த.வெ.க நிருவாகிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், முதியவரின் உடல் காலங்காலமாக புதைக்கப்பட்ட அதே சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
M.வெங்கடேசன் கலசப்பாக்கம் செய்தியாளர்