🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் ஸ்ரீ ஐயனார் – ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா கோலாகலம்தலைவாசல், ஜூலை 28: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ …

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

முக்கிய செய்தி

  • Home /
  • DISTRICT /
  • சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் ஸ்ரீ ஐயனார்- ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா கோலங்கலமாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் ஸ்ரீ ஐயனார்- ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா கோலங்கலமாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் ஸ்ரீ ஐயனார் – ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா கோலாகலம்தலைவாசல், ஜூலை 28: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் – ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயிலின் ஆண்டு தேர் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.விழாவையொட்டி அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ ஐயனார் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் குலவையிட்டு சுவாமியை வழிபட்டனர். தேவியாக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்.தேர் திருவிழாவை முன்னிட்டு காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு விழா சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் கண்காணிப்பில் விழா அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி சிறப்பாக நிறைவடைந்தது.

சேலம் செய்தியாளர் பாலமுருகன்