🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் GK கதிரவன் தலைமையில்…தமிழக முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களை இழுவை படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேட்டவலத்தில் நடைபெற்ற …

அரசு பேருந்தில் சென்ற இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்….திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பாய்ச்சல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அவர்கள் மற்றும் S.வேலு எம்எல்ஏ அவர்கள் கலந்து …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இன்று சிறப்பாக திறக்கப்பட்டது. இதில் தலைவர் M. கோவிந்தராஜ். கௌரவ தலைவர் SPR.ராமலிங்கம்.செயலாளர் P.பிரபு. பொருளாளர் A. அசோகன். துணைத் …

சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் ஸ்ரீ ஐயனார் – ஸ்ரீ செல்லியம்மன் தேர் திருவிழா கோலாகலம்தலைவாசல், ஜூலை 28: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ …

முக்கிய செய்தி

  • Home /
  • CRIME /
  • அரசு பேருந்தை வழிமடக்கி உள்ளே இருந்தவரை வெற்றி சென்ற மூன்று மர்ம நபர்கள்

அரசு பேருந்தை வழிமடக்கி உள்ளே இருந்தவரை வெற்றி சென்ற மூன்று மர்ம நபர்கள்

அரசு பேருந்தில் சென்ற இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்….திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் கிராமம் அருகே அரசு பேருந்தை வழிமடக்கி பேருந்தில் பயணம் செய்த இளைஞரை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர், ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் தொடர்பாக தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.திருவண்ணாமலையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசு பேருந்தில் ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் பயணம் மேற்கொண்டுள்ளார், அப்போது தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் புற்றுக்கோவில் அருகே அரசு பேருந்து சென்றபோது பேருந்தை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் சிவசங்கரை அரிவாளால் சரமாறியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர், அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவசங்கரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பேருந்தில் பயணம் செய்த இளைஞரை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தை மடக்கி சரமாரியாக அறிவாளால் வெட்டிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, அது மட்டுமல்லாமல் மர்ம நபர்கள் இளைஞரை சரமாரியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர், இந்த கொலைவெறி தாக்குதலுக்கு முன்விரோதமா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மாவட்டச் செய்தியாளர் P.பிரபு