திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பாய்ச்சல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அவர்கள் மற்றும் S.வேலு எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டார்கள். உடன் RDO. செங்கம் வட்டாட்சியர் P.முருகன் அவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள். மற்றும் பல அரசு அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இங்கு பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. உதவி தொகை வழங்கப்பட்டது. மகளிர்களுக்கு லோன் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆர்கானிக் உரம் வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்டது. மற்றும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் தோட்டக்கலை பயில்கின்ற மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்க்க காலமுள்ளதாகவும். விருப்பப்படுவோர் வந்து சேரலாம் என்றும் கூறப்பட்டது. இன்னும் பல உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாவட்டச் செய்தியாளர் P.பிரபு