🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • Uncategorized /
  • கோவையில் இருமுனை போட்டி வெல்ல போவது?

கோவையில் இருமுனை போட்டி வெல்ல போவது?

கோவையில் பத்துக்குப் பத்து வெல்வது யார்? – இறுதிக்கட்ட போரில் செந்தில் பாலாஜி, வேலுமணி!

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை நெருங்கி யிருக்கும் நிலையில், `கோவை தங்களது கோட்டை’ என நிரூபிக்க செந்தில் பாலாஜி தலைமையிலான தி.மு.க-வும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க-வும் இங்கு சம பலத்துடன் மோதிக் கொள்வதால், தேர்தல் களம் அனல் பறக்கிறது.

கடந்த தேர்தலில் கோவையில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி தர வேண்டும் என செந்தில் பாலாஜியை கோவை தெற்குத் தொகுதியில் தி.மு.க. தலைமை களமிறக்கியிருக்கிறது. கோவையில் பத்துக்குப் பத்து வெல்ல வேண்டுமென்ற தலைமையின் கட்டளையை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என செந்தில் பாலாஜியும், அதைத் தடுத்து தனது ‘பவரை’ மீண்டும் காட்ட வேண்டும் என எஸ்.பி.வேலுமணியும் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக் கின்றனர்.

செந்தில் பாலாஜி அமைத்திருக்கும் இறுதிக்கட்ட தேர்தல் வியூகம் குறித்து மாவட்ட தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகள் எதிர்க் கட்சியாக இருந்ததால், போதிய பலம் இல்லாமல் தேர்தலைச் சந்தித்தோம். இருப்பினும், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் கோவையில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை தி.மு.க ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளால் பலமான கட்சியாகவும், வலுவான கூட்டணியோடும் தேர்தலை எதிர்கொள்கிறோம்.