🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம். இன்றும் தொடரும் 7 ஆம் நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே 10 முத்தூர் …

நாவக்குறிச்சி ஏரியில் சட்டவிரோத மண் கொள்ளையா?மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராம ஏரியில் வண்டல் மண் …

கோவை : கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி,“அதிமுக ஆலமரம் போன்றது. தமிழகத்தை …

போளூர் வடக்கு ஒன்றியம் சார்பாக பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோவில் சிறப்பு பூஜையும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது போளூர் வடக்கு …

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் செங்கம் …

முக்கிய செய்தி

  • Home /
  • SPIRITUALITY /
  • Temple /
  • ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

30/04/26சிறுவாச்சூர் அருகே அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் திரள், பிரம்மாண்ட அன்னதானம்!சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ள சிறுவாச்சூர் திருவள்ளுவர் நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா முத்து மாரியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று ஊர் பொதுமக்கள் சார்பில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள், வேத மந்திர ஓதங்கள் நடைபெற்று, கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் காலை சிறப்பு நேரத்தில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் திரளான பங்கேற்பு காணப்பட்டது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்டமான அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்