🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை நாளைய தினம் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.இதுகுறித்து அண்ணாமலை புதன்கிழமை கூறுகையில், சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் …

முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 5, 2026 அன்று காலை 11:00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் …

சட்டத் துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் அரசு பணியிலிருந்து மே 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.அவரது ஓய்வைத் தொடர்ந்து, மாநில சட்ட …

சென்னை: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சிபிஎஸ்இ மற்றும் …

தமிழ்நாடு: தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 75 ஆண்டுகளில், உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றாமல், நேரடியாக உச்ச …

முக்கிய செய்தி

திருவண்ணாமலையில் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் சம்பத்ராஜ் அவர்கள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. ஏழுமலை அவர்களை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று மக்களிடையே உரையாற்றினார். மாவட்ட செய்தியாளர் P. பிரபு

தலைவாசல் பகுதியில் இரட்டை இலைக்காக வாக்குகள் சேகரிப்பு

17.04.2026 – சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பு!சேலம் மாவட்டம், தலைவாசல் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாவக்குறிச்சி தலைவாசல் நத்த கரை உள்ளிட்ட பகுதிகளில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.பிரச்சாரத்தின் போது மக்களுக்கு பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்:ரேஷன் கார்டு அடிப்படையில் ₹10,000 நிதியுதவிவிவசாயக் கடன் தள்ளுபடிபுதிய வேலைவாய்ப்பு திட்டங்கள்கால்நடை பூங்காவில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம்இந்த பிரச்சாரம் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், அன்பழகன், அய்யாவு, ராஜேந்திரன், என்.கே. முத்துசாமி, வார்டு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, மகளிர் அணி நிர்வாகிகள் ராதா, பானுமதி, பாஜக ஒன்றிய தலைவர் ஜி.எம். முருகன், பாமக ஒன்றிய தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

சேலம் கெங்கவல்லி மலைப்பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

18/04/26சேலம் மாவட்டம் கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சமலை மலைப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு அ. நல்லதம்பி அவர்கள், பச்சமலை மலைப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் சந்தித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.மேலும், மக்களுடன் இணைந்து நடனம் ஆடி உற்சாகத்தை ஏற்படுத்திய அவர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு துரை ரமேஷ் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.இந்த பிரச்சாரம் மலைப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

திருவண்ணாமலை J. P. நட்டா வருகை

திருவண்ணாமலைக்கு j. P. நட்டா அவர்கள் 14/04/2026 அன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார். அவர் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. ஏழுமலையை ஆதரித்து சிறப்புரையாற்றினார். அதில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுத்த முக்கிய திட்டங்களையும் மோடி அரசு சாதனைகளையும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். பின்பு C. ஏழுமலை அவர்கள் மக்களிடையே வாக்குகளை சேகரித்தார். உடன் மாவட்டத் தலைவர் ரமேஷ்.T. S. சங்கர். மற்றும் என் டி ஏ கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.