🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

அண்ணாமலைக்கு வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது. அண்ணாமலை வந்ததால் பா.ஜ.க பலமடையவும் இல்லை; அவர் வெளியே சென்றதால் பலவீனம் அடையவும் இல்லை. அண்ணாமலையுடன் சென்றவர்கள் சுயநலவாதிகள். பொதுநலவாதிகள் பா.ஜ.க.விலேயே தொடருகின்றனர். …

கோவை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட அறிவிக்கப்படாத சர்ச்சைகள் தான் ஏராளமான உள்ளன. முதலமைச்சர் விஜயும், அமைச்சர்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆய்வு என்கிற …

கோவை : தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் புதிய விதிகள் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு …

கல்வி : பள்​ளிக்​கல்​வித் துறை​யில் புதிய பதவி​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்ளது. இதுதொடர்​பாக துறைசெயலர் ப.சந்தரமோகன் வெளி​யிட்​ட அரசாணை: பள்​ளிக்​கல்​வித் துறை​யின் அரசு தேர்​வுத்​துறை​யில் புரோகி​ராமர், தமிழ்​நாடு பொது சார்​நிலை பணி​யின்​கீழ் கான்​சோல் …

“என்னுடைய கைக்குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். மேயர் பிரியாவும் வந்திருந்தார். மரியாதை நிமித்தமாக கூட அவர் வணக்கம் வைக்கவோ சிரிக்கவோ தயாராக இல்லை. நானும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.திரு.வி.க …

முக்கிய செய்தி

செங்கத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் 25/04/2026 ஒன்றியம் தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு செங்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கோ.முருகன் தலைமையில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நீ. கோபி ஏற்பாட்டில் பணி நிறைவு பாராட்டு விழா செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செங்கம் வட்டாட்சியர் தனி (ஆதி.ந.பி) சி.முனுசாமி கலந்து கொண்டு பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவு கேடயங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.உடன் இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார ஆசிரியப் பயிற்றுநர்கள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெறுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செங்கம் வட்டார கல்வி அலுவலர் சி. பிரகாஷ் நன்றியுரையாற்றினார். மாவட்டச் செய்தியாளர் எம்.சங்கர்

திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி செயலாளரை ஊர் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் தென்முடியனூர் ஊராட்சிக்கு புதிதாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சி செயலர் திரு ராஜசேகர் அவர்கள் வருகைக்குப் பிறகு நமது ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மற்றும் தேர்தல் பணியும் மிக சிறப்பாக நடைபெற்றது இதை ஊர் பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி ஊராட்சி செயலர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதையும் இவர் மிகச் சிறப்பாக செயல்படுவதால் எங்கள் ஊராட்சிக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள். தண்டராம்பட்டு செய்தியாளர் V. சத்தியசீலன்

ஆத்தூர் அருகே சப் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

23/04/26ஆத்தூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம் – காவல்துறையில் சோகம்சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் (58) மாரடைப்பால் உயிரிழந்தார்.தேர்தல் பணிக்காக நாயக்கியம்பட்டி பகுதிக்கு சென்றிருந்த அவர், இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.அவரது திடீர் மறைவு காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் TVK வேட்பாளரை வாக்குச்சாவடிக்குள் நுழையவிடாமல் தடுத்த திமுகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா மேல்பெண்ணாத்தூர் கிராமத்தில் இன்று தேர்தல் நடக்கும்போது T V K வேட்பாளர் பாரதிதாசனை பூத்துக்கு சென்று பார்வையிடும் போது உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய திமுக நிர்வாகிகள் பாரதிதாசன் ஆர்வலர்கள் ஏன் தடுக்குறீங்கள் என்று கேட்கும் போது வாக்குவாதம் முட்டி அடிதடியாக மாறியது T V K கட்சியின் பொறுப்பாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் பெண்ணாத்தூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மாவட்டச் செய்தியாளர் M. சங்கர்

கோவை.அ.தி.மு.க.வேட்பாளர் தர்ணா

செந்தில் பாலாஜி தொகுதியில் தேர்தலை ரத்து பண்ணுங்க! அதிமுக வேட்பாளர் தர்ணா. கோவை தெற்கில் பரபரப்பு: கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தனது ஆதரவாளர்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு தொடர்ந்து பணப்பட்டுவாடா நடந்து வருவதாகவும், ஆனால் பணம் கொடுப்பவர்களை பிடித்து கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு வைத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி களம் காண்கிறார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான் அம்மன் அர்ஜுனன் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்யுமாறு கூறி தர்ணாவில் ஈடுபட்டு இருக்கிறார்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது

20/04/26சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் சூடு அதிகரித்துள்ளது. நல்லதம்பி அவர்களுக்கு ஆதரவாக, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் மணிகண்டன் தலைமையில் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இந்த பிரச்சாரத்தில் பாஜக ஒன்றிய தலைவர் GMS முருகன், ஒன்றிய துணைத் தலைவர் பச்சமுத்து, ஒன்றிய செயலாளர் அஜித் குமார், ஐடி விங் பொறுப்பாளர் வேலாயுதம் அங்கமுத்து கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மணிகண்டன் அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெண்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, வாக்குகள் சேகரிக்கப்பட்டன. தேர்தல் பரப்புரை தீவிரமடைந்த நிலையில், கெங்கவல்லி தொகுதியில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு

19/04/26 சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதியில் அ. நல்லதம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிறுவாச்சூர் கிராமத்தில் பகுதிகளில் வீடு தோறும் சென்று ஆதரவு கோரிய அவர், ₹10,000 நிதியுதவி, விவசாயக் கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்ற வாக்குறுதிகளை அறிவித்தார்இந்த நிகழ்வில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆறு இளங்கோவன் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, சேலம் புறநகர் மாவட்டம் பொருளாளர் ஜெகதீசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பெரியசாமி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கந்தசாமி மேலும் பாரதீய ஜனதா கட்சி முன்னாள்மாவட்டத் தலைவர் மணிகண்டன்ஒன்றிய தலைவர் ஜி.எம். முருகன் வேலாயுதம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஜெயப்பிரகாஷ் ஒன்றிய தலைவர் ராமசாமி, பொன்னுசாமி மற்றும் குள்ளு மூப்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரச்சாரத்தை உற்சாகமாக முன்னெடுத்தனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

கோவையில் இருமுனை போட்டி வெல்ல போவது?

கோவையில் பத்துக்குப் பத்து வெல்வது யார்? – இறுதிக்கட்ட போரில் செந்தில் பாலாஜி, வேலுமணி! சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை நெருங்கி யிருக்கும் நிலையில், `கோவை தங்களது கோட்டை’ என நிரூபிக்க செந்தில் பாலாஜி தலைமையிலான தி.மு.க-வும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க-வும் இங்கு சம பலத்துடன் மோதிக் கொள்வதால், தேர்தல் களம் அனல் பறக்கிறது. கடந்த தேர்தலில் கோவையில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி தர வேண்டும் என செந்தில் பாலாஜியை கோவை தெற்குத் தொகுதியில் தி.மு.க. தலைமை களமிறக்கியிருக்கிறது. கோவையில் பத்துக்குப் பத்து வெல்ல வேண்டுமென்ற தலைமையின் கட்டளையை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என செந்தில் பாலாஜியும், அதைத் தடுத்து தனது ‘பவரை’ மீண்டும் காட்ட வேண்டும் என எஸ்.பி.வேலுமணியும் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக் கின்றனர். செந்தில் பாலாஜி அமைத்திருக்கும் இறுதிக்கட்ட தேர்தல் வியூகம் குறித்து மாவட்ட தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகள் எதிர்க் கட்சியாக இருந்ததால், போதிய பலம் இல்லாமல் தேர்தலைச் சந்தித்தோம். இருப்பினும், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் கோவையில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இந்த முறை தி.மு.க ஆட்சியின் திட்டங்கள், சாதனைகளால் பலமான கட்சியாகவும், வலுவான கூட்டணியோடும் தேர்தலை எதிர்கொள்கிறோம்.

டிரைவரின் அலட்சியத்தால் 9 உயிர் பறிபோனது

9 ஆசிரியர்களின் கனவுகளை பறித்த டிரைவரின் அலட்சியம்.. வால்பாறை மக்கள் சொல்வது என்ன? வால்பாறை: வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று. இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்பு சுவரை தாண்டி தவறி விழுந்தால் நேராக 9 வது வளைவில் தான் விழுவோம். களப்பணியின் போது நாங்கள் இதன் வழியே 13 வது வளைவில் இருந்து கீழே நேரடியாக 9 வது வளைவு வரை சென்று இருக்கிறோம் என்று பொதுமக்கள் வால்பாறை சம்பவம் குறித்து விவரிக்கிறார்கள். டிரைவரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவே இதற்கு காரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

செங்கம் சிவன் கோவில் அருகே போதை ஆசாமிகள் அட்டூழியம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் அமைந்துள்ள சிவன் கோவில் முன்பு மாமிசக் கவர்களும் மது பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதனை கோவில் அறநிலைத்துறையும் நகராட்சியும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது பொதுமக்கள் கோவிலுக்கு அமைதியும் சந்தோஷத்தையும் தேடி தான் வருகின்றார்கள். ஆனால் இங்கு மது பிரியர்கள் மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை சிவன் கோவில் முன்னே உடைத்து விட்டு செல்கின்றார்கள். இதனால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் குழந்தைகள் கால்களில் காயத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனை அறநிலைத்துறையோ கோவில் நிர்வாகமோ மற்றும் நகராட்சி அதிகாரிகளோ கண்டு கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலை நீடித்தால் சிவன் கோவில் மது அருந்தும் கூடமாக மாறிவிடும் என்ற அபாயம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வார்களா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மாவட்ட செய்தியாளர் P. பிரபு