🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சுண்டக்காபாளையம் கிராமத்தில் பூட்டி வைத்திருந்த கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த மர்ம நபர்கள். ரமேஷ் s/o சம்பத் இவர் …

நாவக்குறிச்சி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது.நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் …

எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்ததுதி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துசேலம், ஜூன் 10–சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. …

தமிழக வெற்றிக் கழகம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின்படிகழக பொதுச் செயலாளர்மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு N ஆனந்த்அவர்களின் நல்வழியில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் …

பொள்ளாச்சி வால்பாறை மெயின் ரோடு ஆவல்சினம்பாளையம் சுப்பிரமணியம் அவர்களின் மகன் நந்தகுமார் என்பவர் பொள்ளாச்சி கோவை மெயின்ரோட்டில் உள்ள சிடிசி டிப்போ பின்புறம் கடந்த நான்கு வருடமாக டீக்கடை நடத்தி …

முக்கிய செய்தி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சியில் மாரியம்மன் மற்றும் கருப்புசாமி கோவில் விழா கோலாக்கலமாக நடைபெற்றது.

தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், மலையம்மன் மற்றும் பதினெட்டாம் படி கருப்பு சுவாமி கோவில்களில், பக்தர்கள் பங்கேற்ற பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.விழாவையொட்டி நடைபெற்ற பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் மாரியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் ஆகியவை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி வீதி வீதியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனர்.மேலும், மாரியம்மன் மற்றும் பதினெட்டாம் படி கருப்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவின் ஒரு பகுதியாக, சித்ரா பௌர்ணமி தினத்தையொட்டி பக்தர்களுக்கு கூல் (மோர்/குளிர்பானம்) வழங்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனால் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.இந்த விழா கிராமத்தின் பாரம்பரியமும், பக்தி உணர்வும் ஒன்றிணைந்து நடைபெறும் முக்கிய ஆன்மீக நிகழ்வாக அமைந்தது.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

தலைவாசல் அருகே தனியார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

நாளை 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தலைவாசல் அருகே தனியார் பள்ளியில் ஏற்பாடுசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாளை நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற உள்ளதாக தேர்தல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வாக்கு எண்ணிக்கையில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.வேட்பாளர் விவரம்கெங்கவல்லி தொகுதி: 13 வேட்பாளர்கள்ஆத்தூர் தொகுதி: 15 வேட்பாளர்கள்வாக்காளர் விவரம்கெங்கவல்லி தொகுதிமொத்த வாக்காளர்கள்: 2,31,665ஆண் வாக்காளர்கள்: 1,12,591பெண் வாக்காளர்கள்: 1,19,065மூன்றாம் பாலினம்: 9ஆத்தூர் தொகுதிமொத்த வாக்காளர்கள்: 2,43,138ஆண் வாக்காளர்கள்: 1,17,645பெண் வாக்காளர்கள்: 1,25,473மூன்றாம் பாலினம்: 20மொத்த நிலை (இரு தொகுதிகள் சேர்த்து)மொத்த வாக்காளர்கள்: 4,74,803ஆண் வாக்காளர்கள்: 2,30,236பெண் வாக்காளர்கள்: 2,44,538மூன்றாம் பாலினம்: 29முக்கிய தகவல்தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது, வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் நேரடி கண்காணிப்புடன் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.நாளை 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தலைவாசல் அருகே தனியார் பள்ளியில் ஏற்பாடுசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாளை நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுமையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற உள்ளதாக தேர்தல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வாக்கு எண்ணிக்கையில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.வேட்பாளர் விவரம்கெங்கவல்லி தொகுதி: 13 வேட்பாளர்கள்ஆத்தூர் தொகுதி: 15 வேட்பாளர்கள்வாக்காளர் விவரம்கெங்கவல்லி தொகுதிமொத்த வாக்காளர்கள்: 2,31,665ஆண் வாக்காளர்கள்: 1,12,591பெண் வாக்காளர்கள்: 1,19,065மூன்றாம் பாலினம்: 9ஆத்தூர் தொகுதிமொத்த வாக்காளர்கள்: 2,43,138ஆண் வாக்காளர்கள்: 1,17,645பெண் வாக்காளர்கள்: 1,25,473மூன்றாம் பாலினம்: 20மொத்த நிலை (இரு தொகுதிகள் சேர்த்து)மொத்த வாக்காளர்கள்: 4,74,803ஆண் வாக்காளர்கள்: 2,30,236பெண் வாக்காளர்கள்: 2,44,538மூன்றாம் பாலினம்: 29முக்கிய தகவல்தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது, வாக்கு எண்ணிக்கை பணிகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் நேரடி கண்காணிப்புடன் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

பள்ளி கல்வித்துறை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தனியார் பள்ளிகளில் இணைய வழி கல்வி நடைபெறுகிறது.

கோவை: கோடை விடுமுறையில் சென்னை உட்பட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இணையதளம் வழியாக சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.தமிழக பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில் சென்னை, நாமக்கல், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு,தாம்பரம், மேடவாக்கம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போதே பாடங்களை நடத்தி தொடங்கிவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.அதேபோல், தினசரி பாடவேளைகள் குறித்த பள்ளிகளின் அட்டவணையும் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், ‘‘பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பல்வேறு தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருகின்றன.வழக்கமான வகுப்புகளை போல் தினமும் காலை 10 முதல் மாலை 4 மணி வரை பாடங்கள் நடத்துகின்றன. தொடர் வகுப்புகள் குழந்தைகளுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

சுதந்திரம் பெற்று நூற்றாண்டை நெருங்குகின்றன. ஆனால் படிக்க வழி இன்றி தவிக்கும் ஏழை மாணவர்கள். அரசாங்கம் செவிசாய்க்குமா?

அரசு பள்ளியே இல்லை! மேல் நாரிப்பனூரில் கல்வி உரிமை பறிப்பு – அரசு கண்ணை மூடியதா?” மேல் நாரிப்பனூர் கிராமத்தில் அரசு பள்ளி இல்லாத அவலம் – மாணவர்கள் கல்வி எதிர்காலம் கேள்விக்குறி! கள்ளக்குறிச்சி, மே 2:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள மேல் நாரிப்பனூர் கிராமத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் எதுவும் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருவது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அரசு கல்வி திட்டங்கள் “அனைவருக்கும் சம கல்வி” என வலியுறுத்தப்படும் நிலையிலும், இக்கிராமத்தில் அடிப்படை அரசு பள்ளி வசதியே இல்லாதது “கல்வி உரிமை பறிப்பு” என பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர்.தனியார் பள்ளிகளை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலை இருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்கள் அதிக கல்விச்செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் பலர் கல்வியை தொடர முடியாத அபாயமும் உருவாகியுள்ளது.மக்கள் தொகை விவரம் (மதிப்பீடு)மேல் நாரிப்பனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3,500 முதல் 4,500 பேர் வசித்து வருகின்றனர். இதில் 600 முதல் 800 மாணவர்கள் பள்ளிக் கல்வி வயதினராக உள்ளதாக கூறப்படுகிறது.வாக்காளர் எண்ணிக்கைஇப்பகுதியில் சுமார் 2,200 முதல் 2,800 வாக்காளர்கள் உள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.மக்கள் கடும் வேதனை“எங்கள் கிராமத்தில் அரசு பள்ளி இல்லாமல் எங்கள் குழந்தைகள் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. இது எங்களின் பொருளாதாரத்தை முற்றிலும் சுமையாக மாற்றியுள்ளது” என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.மாணவர்கள் பாதிப்புஅரசு பள்ளி அமைக்கப்பட்டால் குறைந்தது 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பயன் பெறுவார்கள் என்றும், சுற்றுவட்டார கிராமங்களையும் சேர்த்தால் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி வாய்ப்பு பெறுவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.சமூக விமர்சனம்சுதந்திரம் பெற்ற பல தசாப்தங்கள் கடந்த பின்னரும் அடிப்படை கல்வி வசதி இல்லாத நிலை தொடர்வது “அமைப்பு தோல்வி” என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையை நோக்கி குவிந்த வாகனங்களும் மக்கள் கூட்டங்களும்

திருவண்ணாமலையில் மாதந்தோறும் சாதாரண நாட்களிலும் பௌர்ணமி அன்றும் மக்கள் கூட்டம் கிரிவலம் சுற்றும் வழக்கம் ஆந்திரா. கேரளா. கர்நாடகா மற்றும் சில மாநிலங்களில் இருந்தும் பல வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் கிரிவலம் சுற்றுவது வழக்கம். அதுமட்டுமின்றி வெளிநாட்டவர்கள் ஆன்மீக பூமியான திருவண்ணாமலையின் ரமணாஸ்வரம் விசிறி சாமியார் ஆசிரமங்கள் மற்றும் இன்னும் சில ஆசிரமங்கள் சென்று யோகாவில் ஈடுபட்டு அமைதியான சூழ்நிலையையும் இந்து கலாச்சாரத்தையும் மிகவும் விருப்பத்துடன் பின்பற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அதிகப்படியான சித்தர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. கிரிவலம் சுற்றுவது மூலமாக மக்கள் வேண்டுதல் நிறைவேறுகின்றது என்று கூறப்படுகிறது. இதையொட்டி நேற்று 30/04/2026 இரவு 9:51 PM அளவில் சித்ரா பௌர்ணமி தொடங்கி இன்று 01/05/2026 இரவு 11:07 வரை நீடிக்கும். எனவே சாதாரண நாட்கள் மற்றும் பௌர்ணமி நாட்கள் சுற்றுவதை விட இந்த வருட சித்ரா பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர். இந்தச் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதினால் இந்த வருடம் முழுவதும் கிரிவலம் வந்து விரதம் இருப்பதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர். வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இன்றி அனைத்து வாகனங்களும் அங்கேயும் நிறுத்தப்பட்டு கிரிவலம் சுற்றி மீண்டும் தங்கள் ஊருக்கு செல்ல தவிக்கின்றனர். இதனால் திருவண்ணாமலை உள்ளூர் வாசிகளும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. மாவட்டச் செய்தியாளர். பு பிரபு

ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

30/04/26சிறுவாச்சூர் அருகே அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – பக்தர்கள் திரள், பிரம்மாண்ட அன்னதானம்!சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ள சிறுவாச்சூர் திருவள்ளுவர் நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகா முத்து மாரியம்மன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று ஊர் பொதுமக்கள் சார்பில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.அதிகாலை முதலே யாகசாலை பூஜைகள், வேத மந்திர ஓதங்கள் நடைபெற்று, கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பின்னர் காலை சிறப்பு நேரத்தில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் திரளான பங்கேற்பு காணப்பட்டது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் பிரம்மாண்டமான அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து போளூர் செல்லும் கனரக வாகனங்கள் பஜார் வழியே செல்வதினால் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகின்றன. அந்த சாலை குறுகிய சாலையாக உள்ளதால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரோட்டோரம் உள்ள கடைக்காரர்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த வாகன நெரிசலை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வெப்பம் அதிகமாக உள்ளதால் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க வருகின்றனர் எனவே கனரக வாகனங்களை மாலை நேரங்களில் சில மணி நேரம் டவுனுக்கு வெளியே நிற்க வைத்து மக்கள் கூட்டம் குறையும் சமயத்தில் வாகனங்களை செல்ல விடலாம் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. திருவண்ணாமலை செய்தியாளர் எம். சங்கர்.

ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த சிறுத்தை ஆறு ஆடுகளை கடித்துக் கொன்றது.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் ஒன்றியம் காவேரிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான குத்தேரிகள்காடு சின்னத்தம்பி என்பவரின் பட்டிக்குள் புகுந்து 6 ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை கடித்து கொன்றது இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 38 ஆம் ஆண்டு தேர் திருவிழா

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்துறை ரோட்டில் அமைந்துள்ளஅருள்மிகு விநாயகர் சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் 38ஆம் ஆண்டு தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, பக்தி பரவசத்தில் தேர் இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

2019 ஆம் ஆண்டு காவல்துறையால் நடைபெற்ற இரட்டைக் கொலை

நீதிமன்றம் ஆயில் தண்டனை வழங்கியது பணியை இழந்த நியாயமான காவல்துறை அதிகாரி தற்போது செய்ய வேண்டியவை இதுவே…1. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு (Article 311)அரசு ஊழியர் ஒருவர் “டிஸ்மிஸ்” (Dismissal) செய்யப்படும்போது, அவர் எதிர்காலத்தில் எந்த அரசுப் பணியிலும் சேர முடியாது. இது ஒரு நபரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மிகக்கடுமையான தண்டனை என்பதால், நீதிமன்றம் இதில் அதிக கவனம் செலுத்தும்.ஒருவேளை நீதிமன்றம் உங்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டால், அரசு வழங்கிய “நிரந்தர பணி நீக்க உத்தரவு” (Dismissal Order) சட்டப்படி செல்லாததாகிவிடும்.அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட அடுத்த கணமே, நீங்கள் மீண்டும் பழைய பணியில் தொடர தகுதியுடையவர் ஆகிறீர்கள்.2. “Dismissal” vs “Removal”பணி நீக்கத்தில் இரண்டு வகைகள் உண்டு:Removal: பணியிலிருந்து நீக்குதல் (இவர் வேறு அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்).Dismissal: நிரந்தர பணி நீக்கம் (இவர் இனி எந்த அரசுப் பணியும் செய்ய முடியாது).இந்த இரண்டு வகை நிரந்தரத் தண்டனைகளுக்கும் FR 54 (Fundamental Rule 54) மற்றும் Article 311 ஆகியவை தீர்வாக அமையும்.3. நீதிமன்றம் எப்போது தலையிடும்?நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் பின்வரும் காரணங்களுக்காக நீதிமன்றத்தை நாடி மீண்டும் பணியைப் பெறலாம்:Natural Justice: எனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.Lack of Evidence: என் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.Malafide Intent: உள்நோக்கத்துடன் பழிவாங்கப்பட்டேன்.Acquittal: கிரிமினல் வழக்கில் நான் (குற்றமற்றவர்) எனத் தீர்ப்பு வந்துவிட்டது.4. அடுத்த கட்ட நடவடிக்கை (The Remedy)நிரந்தர பணி நீக்க உத்தரவை எதிர்த்து நீங்கள் வழக்குத் தொடரும்போது (Writ Petition), நீதிமன்றம் அந்த உத்தரவை “Quash” (ரத்து) செய்யும். உத்தரவு ரத்து செய்யப்பட்டால், அரசு உங்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.முக்கியமான குறிப்பு:டிஸ்மிஸ் செய்யப்பட்ட அதிகாரி நிரந்தரமாகப் பணியை இழந்துவிட்டாலும், அவர் நீதிமன்றம் சென்று “தவறான பணிநீக்கம்” என்று நிரூபித்துவிட்டால், அவர் இழந்த பணி, தகுதி மற்றும் ஊதியம் அனைத்தையும் திரும்பப் பெறச் சட்டத்தில் வழி உண்டு.எனவே, “நிரந்தர பணி நீக்கம்” என்பது இறுதியானது அல்ல; அதைச் சட்ட ரீதியாக உடைக்க முடியும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புடன் முறையான மனு (Representation) அளிப்பதே இதற்கான முதல் தீர்வாகும்.