🔴 LIVE | 🕒
📅
🌟 Nakshatra:
📍 ,
3

What's New?

அண்ணாமலை IPS அவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சியினை உருவாக்கும் நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கொள்கையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி அங்கெங்கே …

தமிழ்நாடு : தமிழகத்​தில் மோட்​டார் வாகன ஆய்​வாளர், இளநிலை பொறி​யாளர், கிராம நிர்​வாக அலு​வலர் (விஏஓ) உட்பட 7 பேரை லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கைது செய்​துள்​ளனர். தமிழகத்​தின் பல்​வேறு …

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு பகுதியில் ஜோகி செட்டி இன மக்கள் தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலத்துக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதால் …

கோவை, கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் …

திருவண்ணாமலை to காஞ்சி சாலையில் விஸ்வநாதபுரம் கூட்டு சாலை அருகே குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் தவிர்ப்பதற்கு எதிர்ப்புறம் திரும்பிய கார் நிலை தடுமாறி சாலை விபத்தில் சிக்கியது …

முக்கிய செய்தி

கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி தலைமையிலான காவல்துறையினர், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்து போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், க்ரைம் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மற்றும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் பதிவேற்றார்.

சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திரு. க. இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (18.05.2026 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. க. இளம் பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட நிர்வாக பணிகளை சிறப்பாக மேற்கொள்வதாக தெரிவித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செய்தியாளர் பாலமுருகன்

திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பாச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விண்ணவணூர் கிராமம் நயரா பெட்ரோல் பங்க் எதிரே சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபரின் பிரேதம் உள்ளது.இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பாச்சல் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது செல் 9498100475

திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற டிராக்டர் மீது மோதிய கார் .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா தனக்கவுண்டான் புதூர் பேருந்து நிலையம் அருகே திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த ட்ராக்கர் திடீரென எந்த சிக்கலும் இன்றி வலது புறமாக திரும்பியதால் பின்னே வந்த கார் டிராக்டர் மீது மோதியதில் கார் பலத்த சேதம் அடைந்தது காரை ஓட்டியவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர்த்தபினார் இதனால் அங்கு சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது மாவட்ட செய்தியாளர் பு. பிரபு

விவசாய கணத்தில் தவறி விழுந்த பெண்மணியை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா பெயர் மட்டும் கிணற்றில் விவசாய நிலத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆனந்தி என்ற பெண்மணி தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த பெண்மணியை துரிதமாக செயல்பட்டு எந்த ஒரு காயங்களும் இன்றி பத்திரமாக காப்பாற்றி உள்ளனர். மற்றும் இது போன்ற வெயில் காலங்களில் கிண்ணற்றோரும் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மற்றும் அங்கு செல்ல நேர்ந்தால் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர் மாவட்டச் செய்தியாளர் எம். சங்கர்

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் பதவி ஏற்றார்.

தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று காலை 10 அளவில் நேரு விளையாட்டு அரங்கில் பதவி ஏற்றார். பதவியேற்று முதல் மூன்று சிறப்பம்சங்களில் கையெழுத்து போட்டார். அவை 1. இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு 2 மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம். 2.போதைப்பொருள் தடுப்பு சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ் அமைத்தல். 3.பெண்கள் பாதுகாப்பிற்கான தனி பாதுகாப்பு படை அமைத்தல். அதுமட்டுமின்றி அவர் பேட்டி அளிக்கையில் நானும் தவறு செய்யமாட்டேன் யாரையும் தவறு செய்ய விட மாட்டேன் என்று கூறி பதவிக்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் ஏதாவது தவறான செயல்களில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் அந்த எண்ணங்களை இங்கேயே மறந்து விடுங்கள் என்று எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி தன்னை வெற்றி பெற செய்த மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு நன்றியை தெரிவித்து தமிழ்நாட்டை பாதுகாப்பான நாடாகவும் மற்றும் என்னை வெற்றி பெறச் செய்த உங்களுக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார். மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு

தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவி ஏறகிறார்

தமிழக புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.பதவியேற்பு விழா நேரலை: சென்னையின் 20 முக்கிய இடங்களில் இந்த விழா நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க நேரு ஸ்டேடியத்திற்கு மக்கள் திரளாக வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் விண்ணனுர் அருகே பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர்த்த தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா விண்ணனுர் அருகே திருவண்ணாமலை இருந்து சிவசக்தி தனியார் பேருந்து செங்கம் நோக்கி சென்று கொண்டு இருந்தன. எதிரே வந்த பாண்டிச்சேரி பதிவெண் கொண்ட வாகனம் விண்ணனுர் அருகே அரசு பேருந்தை முந்தும் போது எதிரே வந்த சிவசக்தி பேருந்தில் மோதின. பேருந்து ஓட்டுநர் மிக கவனமாக பேருந்தை ஓட்டியதால் பெரிய அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டன. காரில் இருந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதனால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த பாய்ச்சல் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து காரில் வந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி தனி அதிமுக வேட்பாளர் T S வேலு வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் திரு டி.எஸ்.வேலு அவர்கள் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிரி. மற்றும் டி வி கே வேட்பாளர் பாரதி பின்னுக்கு தள்ளி 14036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் எம்எல்ஏ சாமிக்கண்ணு அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வேலு அவர்கள் வெற்றி பெற்றவுடன் செங்கத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மற்றும் செங்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை. டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து செங்கம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். அதிமுக சார்பாக நிர்வாகிகள் வான வேடிக்கையும் பட்டாசுகளையும் வெடித்து வரவேற்றனர். மாவட்டச் செய்தியாளர் பு. பிரபு